உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

158 பெட்டி, அவனுடைய போக்கை ஆதரிக்கிறாள். சுகபோகமும், செல்வநிலையும் இழந்தாலும்பரவாயில்லை, அந்தனிக்குத் துணைநிற்பதுதான் அறிவுடைமை புடைமை என்று எலினாரும் முடிவு செய்கிறாள். அன் அந்தனி, துறவியாகிறான்! மனைவி, குழந்தைகள், உண்டு!! தொழில் நடத்துகிறான், தன்வாழ்க்கைக்கான வசதி பெற! தொண்டுபுரிகிறான்! அவனுடைய துறவு, களுக்கு ஓர் நல்வாய்ப்பாகிறது. ஏழை தம்பி ! இதுதான் கதை!! ஒரு கவர்ச்சியும் தெரியவில்லை அல்லவா!! இச்சொலியும் விம்மலும், முழக்கமும் முணுமுணுத் தலும், கூடிப்பிரிதலும் கொண்டாட்டமும் ஏதுமில்லை. எனி னும், இந்தக் கதையின் மூலம், ஜெரோம்-கெ-ஜெரோம், அளிக்கும் கருத்து, உண்மையிலேயே, படிப்போரை, புதியதோர் உலகுகொண்டு சேர்க்கிறது. உண்மைத் துறவு, என்ன என்பதை உணரமுடிகிறது! இக்காலத் துறவிகளைக் கண்டு, என்னே! காலத்தின் கோலம்! என்று ஏங்கும் மனத்தினருக்கு, அந்தனி கதை, உண்மைத் துறவு நிலை எங்ஙனம் மேம்பாடுடையதாக இருக் கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. குப்பை மேட்டில் பிறந்த அந்தனி, கோலாகலமான வாழ்க்கை நடத்துவதற்கான வசதியைப் பெறுகிறான். கொல்லன் பட்டறையில் பிறந்தான், போன்ற மாளிகையைப் பெறமுடிந்தது. கோட்டை நாற்றமடிக்கும் சேரியில் பிறந்தான், உல்லாச உலகிலே இடம் பெற்றான் ; ஏழையர் விடுதியில் நாற்றம் குறையவும், சிறிதளவேனும் அவர்களுக்கு ஏற்றம் கிடைக்கவும், அவன் வழிகண்டான். எனினும், இறுதியில், அவன் தன்னலமறுப்பு ஒன்றின் மூலமாகத்தான் ஏழையர் உலகுக்கு உய்வுதேட முடியும் என்று உணருகிறான் - துறவியாகிறான்! அவன் விரும்பி இருந்தால்.சீமானாகவும் தர்மவானாகவும், மதத் தலைவனாகவும், ஊராள்வோனாகவும் வாழ்ந்து கொண் டிருக்க முடியும். உழைப்பால் உயர்ந்தோன்-என்று ஊரார் அவனைப் பாராட்டினர். பிறந்தாலென்ன, ஏழையாகப் அறிவு இருந்தால், அந்தனி போல அந்தஸ்தான நிலை பெறமுடியும் என்று அனைவரும் கூறினர்.