உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181

181 எமக்கென ஓர் மொழி, அம் மொழிவழி எமக்கென்றோர் பண்பாடு, அப்பண்பாட்டுக்கு உறைவிடமாகவும் உள்ள ஓர் அரசு - இவற்றினுக்கெல்லாம் எம்மிடம் சான்றுகள் உள்ளன என்று சாற்றுகின்றனர். எனினும் இவர்தம் சான்றுகளைச் சருகு என்கிறார். சேற்றிலே சந்தன மணம் கமழ்கிறது என்கிறார், துணிந்து பணிக்கர். அறிவு அறை போகிய பொறி அறுநெஞ்சத்து இறை முறை பிழைத்தோன் வாயிலோயே! என்பதில் காணக்கிடக்கும் (ற'கரத்தின் பெருமையில் பேராசிரியர் நீந்திக் களித்திடுகிறார்-இன்று இறைமுறை பிழைத்தோன் வாயிலோனாக உள்ள பணிக்கர்கள் கண்ணீர் பொழிந்திடும் கண்ணகிகளை "வழக்காடவும் துணிந் தனையோ! அவன் தலை வெட்டுண்டதுபோல உன் நாம் வெட்டுப்பட வேண்டியோ, எமது கொற்றத்தினைக் குறை பேசி நிற்கிறாய்” என்று கேட்கின்றனர். நமது பேராசிரி யர்கள் அந்த வாயிலோன் எது செய்யினும் பரவாயில்லை, 'ழ கரம் பாழ்படாது இருக்கிறதா என்று கவனித்துக் கொண் டிருக்கிறார்கள். லோக்சபா - ராஜப்பிரமுக் - ராஷ்டிரபதி-நயாபைசா! இவ்வண்ணம் படை எடுக்கின்றன வழக்கில் நடமாட வேண் டிய சொற்கள்! 'ழ' வும் ஹூவும் மட்டுமா, மொழியே பிழைப் பது கடினம் என்று நிலை பிறந்திருக்கிறது. கேட்கும் உரிமை உணர்ச்சி, அதற்கான உள்ள உரம் எழக்காணோம்! இரயில்வே நிலையங்களில் இந்தி, அஞ்சல் அட்டைகளில்இந்தி, நாணயங் களில் இந்தி, அலுவலகங்களின் பெயர் பொறிப் பலகைகளில் இந்தி, பட்டாளத்தில் இந்தி - என்று எங்கும் இந்தி நுழைக்கப் படுகிறது! ஆட்சி மன்றங்களிலிருந்து அங்காடிவரையில் இந்தி அரசோச்சக் கிளம்பிவிட்டது. கேட்பார் இல்லை! "தமிழ் இலக்கியம் எதையும் சார்ந்திருப்பதன்று. கலாச்சார உபயோகத்தில் அது தனித்து இயங்கவல்லது. இந்திய இலக்கியங்கள் பற்றி, தென் இந்தியா விலிருந்தே அதுவும் திராவிடர்கள் மூலம் முக்கியமாகத் தமிழ், மலையாளம் பேசும் மக்கள் மூலம்தான் ஐரோப்பா வில் அறிய முடிந்தது. 17-வது 18-வது நூற்றாண்டில், தமிழ் சமஸ்கிருதத்தை விட அதிகம் முன்னேறி இருந்தது. தமிழ்மொழி தவிர மற்ற மொழிகளெல்லாம் சமஸ்கிருதக் கலப்புடையன.35 பிலியோஜாத் எனும் பிரன்ச்சு நாட்டு, மொழித்துறை ஆராய்ச்சியாளர் கூறுகிறார். நாள் பத்து ஆகவில்லை இங்ஙனம் இவர் சென்னையில் கல்லூரியில் நடைபெற்ற, தமிழ்க்கலைக்