உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

182 கழகக் கூட்டமொன்றில் பேசி! பேராசிரியர் சேது(ப் பிள்ளை) அவர்களும் அந்த மன்றத்தில் அமர்ந்திருந்தார் என்று தெரி கிறது. எனினும், என்ன பயன்? ஏற்புடையது! ஈடில்லாதது! தனியாக இயங்கவல்லது! பண்பின் பெட்டகம்!இன்பஊற்று! என்றெல்லாம் கூறித்தான் என்ன பயன்? இந்தி இழிவுபடுத்து கிறது - அதனை இழிவென்று எண்ணாதீர், என்னைப்பாரும், என் சொல்லைக் கேளும், அடுத்த உத்தியோகம் கிடைக்கும்வரை நான் இப்படி 'அடப்பம்' தாங்கும் பணிபுரிபவன் அறிமின்! என்று கூறி வருகிறார் பணிக்கர். பணிக்கர்கள் இதுபோலப் பேசுவது கேட்டும், பாரத அரசில் பணியாரத்துண்டுகள் பெறுவதற்காகப் பல்லிளித்துக் கிடப்போர், மொழி, பண்பாடு, அரசு எனும் எதனை விட்டுக் கொடுத்தேனும், நத்திப்பிழைத்திடும்போக்கிலேசெல்வதைக் காணும்போதும், மிகுதியும் துக்கம் துளைத்திடுகிறது. அந்த வேளையில், ஓரோர் இடத்திலிருந்து உள்ளத்திலுள்ளதை ஒரு சிலர் துணிந்து கூற முன்வருவதுகாண்பது,பாலைவனத்திலே கிடைக்கும் நீரோடை போலாகிறது. மகிழ்ச்சி இனிப்பூட்டு கிறது. இதோ மற்றோர் தமிழாசிரியர்; 'ழ'கரறே' கரத்தோடு நிற்பவரல்ல, நம்மோடு நெடுந்தூரம்வருபவருமல்ல.எனினும், நாம் செல்லும் திசையைச் சுட்டிக்காட்டிடும் அளவுக்கு முன்னணி வருகிறார், டாக்டர் இராசமாணிக்கனார், மதுரைத் தியாகராசர் கல்லூரியில் உள்ளவர். "இந்திய வரலாற்றுக் காலம் தோன்றிய நாள் தொட்டு வெள்ளையர் ஆட்சி ஏற்படும் வரையில், தமிழகம் இந்தியாவை ஆண்ட எந்தப் பேரரசாலும் ஆளப்பட வில்லை என்பது கவனிக்கத் தக்கது. இந்தியாவின் பெரும் பகுதியை ஒரு குடைக்கீழ் வைத்தாண்ட அசோகன் காலத்திலும், தமிழகம் தனியாட்சி புரிந்தது என்பதை அப்பேரரசன் வெளியிட்ட கல்வெட்டுகளே தெரிவிக்கின்றன. இங்ஙனம் பல தூற்றாண்டுகளாகத் தனிப்பட்டு இருந்த தமிழகம் தனக்கென ஒரு மொழியை யும் அதற்குரிய இலக்கியங்களையும் தனிப்பட்ட பண் பாட்டையும் வளர்த்து வந்தது.3 தமிழாசிரியர்கள் அனைவரும் இத்தகைய வரலாற்று உண்மைகளை எடுத்துக்கூறும் உள்ளத் திண்மை பெற்றுவிட் டால், மொழி ஆராய்ச்சித் துறையிலே அல்ல, ஆட்சியாளர் களுக்கு நேசத்தொடர்புகளை ஏற்படுத்தித் தரும் துறையிலே, பணியாற்றும்பணிக்கர் இவ்வளவு பதட்டமாகவாபேசிடுவார்! ஏன், தமிழறிந்தோர் துணிவு பெறாதுள்ளனர்? டாக்டர், அந்த நோயின் தன்மையையும் விளக்குகிறார். "தமிழன் - தமிழனாக வாழ்தல் வேண்டும். அவன் தன் தாய் மொழியின் சிறப்பை அறிதல் வேண்டும்;