உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183

183 தமிழிலேயே தனக்குரிய சடங்குகளைச் செய்துகொள்ள வேண்டும் என்று தமிழில் வல்ல சான்றோர் கூறினால், இவர்கள் நாத்திகர்கள் - வடமொழியை வெறுப்பவர் ஒருமைப்பட்டுள்ள சமுதாயத்தில் வேற்றுமையை உண் டாக்குகின்றனர் என்று ஒரு சாரார் பழிதூற்றுகின்றனர். இவர்களுக்குள்ள நாளிதழ்களின் செல்வாக்காலும், உயர் அலுவலாது மறைமுகமான செல்வாக்காலும். இச்சான் றோர் பலவாறு அழுத்தப்படுகின்றனர். தமிழருள்ளே அறிவற்ற புல்லுருவிகளை ஏவிவிட்டுத் தூற்றவும் செய் கின்றனர்" இந்த அச்சம்தான் பலரை 'ழ'கர 'ற'கரத்தோடு நிறுத்தி விடுகிறது. புல்லுருவிகள்! பொன்னுருவிகள்! கண் சிமிட்டிகள்! காசு வீசுவோர்!- அந்தப் படைவரிசையில் உள்ளவர்கள் பல வகை யினர். ஒன்றால் வீழ்த்த முடியாவிட்டால், மற்றொன்றால்! அடிக்கும் கரத்தால் ஆகாததை அணைக்கும் கரம் சாதித்துத் தருகிறது.பலத்தால் முடியாததை பாவத்தால், பரதத்தால், சாதித்துக்கொள்ள முடிகிறது! எல்லாவற்றையும்விட பழி தாக்கிடும் என்ற பயமே, பலரை வீழ்த்திடப் பயன்படுகிறது. படித்திருப்பாயே தம்பி,பம்பாயில் பத்து நாளைக்குமுன்பு, ஒரு புனித விழாவன்று கடல்நீர் இனிக்கிறது என்று ஒருபுரளி கட்டிவிடப்பட்டதாமே. அந்தச் செய்தியை எவனோ ஒரு எத்தன், தனக்குக் கிடைத்த ஏமாளியிடம் கூறி வைத்திருக் கிறான், கடல்நீர் இன்றுமட்டும் இனிக்கும் என்று அவ்வளவு தான், சாரை சாரையாக மக்கள் கடலை நோக்கிச் சென்று, நான் முந்தி நீ முந்தி என்று விழுந்தடித்துக்கொண்டு சென்று, கடல்நீர் பருகினராம். கடல்நீர் கரித்தது ! முகம் சுளித்தது! குமட்டலும் வந்தது! எனினும் என் செய்வர்! கடல்நீர் இனிக்கும் என்றல்லவா கூறி இருக்கிறார்கள். எனவே கடல்நீர் கரிக்கிறது, இனிக்கவில்லை என்று கூறினால், பாபாத்மாவுக்கு அப்படித்தான்! புண்யாத்து மாவுக்குத்தான் இனிக்கும் என்று கூறிவிடுவரே என்று எண்ணி, ஏதும் கூறாமலே இருந்துவிட்டனர். பெரும்பாலோர்! துணிந்து சிலர் கூறினர், கடல்நீர் எப்போதும்போல் கரிக்கத் தான் செய்கிறது; இனிக்கும் என்று சொன்னது வெறும்புரளி என்று! ஆம்!- என்றுகூட பக்தர்கள் கூறவில்லையாம் முகம் 'ஆம்' என்றதாம்! அதுபோலத்தான் தம்பி, தேசத் துரோகி-நாட்டைக் காட்டிக் கொடுப்பவன் - சமுதாயத்தில் பிளவு மூட்டுபவன்- என்று பழி சுமத்துவரே என்று அஞ்சி, 'ழ்', கா 'ற' கரத் தோடு நின்று விடுகிறார்கள்.