உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

கடிதம்-20 கண்ணீரும் பன்னீரும் நேருவின் வருகைச் செலவு -வரவேற்பும் உபசாரமும் தஞ்சை - திருச்சி-புயல் கொடுமை தம்பி, . கோட்டைமீது, கொடி மரத்துக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு பேசப்போகிறார் நேரு பண்டிதர், சென்னையில். காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மைதானத்திலே உள்ள மேடுபள்ளங்களைச் சமனாக்கி, பாதையைச் செப்பனிடு கிறார்கள், அங்கு பண்டிதர் பேசப்போகிறார். பண்டிதர் பவனிவர இருக்கிற ரோஜபாட்டை'யைப் புதுப்பிக்கிறார்கள்-பல ஆயிரம் செலவு!! பண்டிதர் செல்ல இருக்கும் திருச்சி, குடந்தை, மாய வரம், காரைக்கால், புதுவை, வேலூர் போன்ற ஒவ்வோ ரிடத்திலும் இதுபோன்ற ஏற்பாடுகள், எழிலூட்ட, இன்பம் காட்ட எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன. கோகிலவாணி குரலும் குழலும் இழைந்து, ஊனும் உயிரும் உருகத்தக்க வகையிலே இசை அளிக்க, என்னென்ன பாடல்களை அளிக்க லாம், "எனது உள்ளமே, நிறைந்த தின்ப வெள்ளமே!" "கண்டதுண்டோ கண்ணன்போல்!" "மாலைப் பொழுதினிலே ..." 'அழைத்துவா, போடி இப்படிப் பல உண்டே, எதைப்பாடுவது. இந்தியாவின் முடிசூடா மன்னன் அவையில் என்று எண்ணி எண்ணி, இராத்தூக்கமிழந்து, அந்நாளின் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துக்கொண்டிருக்கக் கூடும். அமைச்சர்கள் புதிய கதர்ச் சட்டைகள் தைத்துக்கொள் கிறார்களாம்! போலீசும் பட்டாளமும், பவனி, பரணி, இரண்டுக்குமே தக்க ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும் காரியத்திலே,மும் முரமாக ஈடுபட்டுள்ளன.