உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

212 வழுக்கி விழுந்தவள், 'பத்தினிகள், பள்ளிக்குத்தலைமை ஆசிரியை. எவ்வளவு பொறுப்பற்ற போக்கு! எத்துணை அலட்சிய சுபாவம்! அக்ரமம் செய்த அந்தக் கம்பெனியாரிடம், ஆயுதம் தயா ரிக்கும் தொழில் அமைக்கும் பொறுப்பு ஒப்படைத்தனர்- ஆண்டுகள் உருண்டோடின- இலட்ச இலட்சமாகப் பணம் கரைந்தது-ஆயுதம் உருவாகச் செய்தனரோ? இல்லை ஆயுதம் செய்வதற்கான தொழில் நுட்பத்தை, இங்குள்ளவர்களுக்குக் கற்றுத் தந்தனரோ? அதுவும் இல்லை. என்ன செய்கிறார்கள்? ஊதியம் பெறுகிறார்கள்! உண்டு கொழுக்கிறார்கள்; நேரு சர்க்காருடைய ஏமாளித்தனத்தை எண்ணி எண்ணிக் கேலி செய்து கொண்டிருப்பார்கள். வேறென்ன செய்வர்? நாம் யார், நமது நடவடிக்கை எத்தகையது என்பதைத் தெரிந்தும், நம்மை அழைத்து வந்தார்களே, இவ்வளவு இளித்தவாயர்' இருக்கும்போது, நமக்கென்ன குறை என்று எண்ணிக் கொள்வர். இந்தத் தொழில் அமைப்பு பெருமளவுக்கு நஷ்டம் கொடுத்து விட்டது. எதிர்பார்த்த தரத்திலோ, அளவிலோ, கருவிகள் உற்பத்தி செய்யப்படவில்லை. தொழில் நுட்பத்தை, இங்குள்ளவர்களுக்குப்போதிக்க, சுவிட்சர்லாந்து நிபுணர் களால் முடியவில்லை. டில்லி பார்லிமெண்டில் அமைச்சர், வெட்கமின்றி, ஒப்புக் கொள்கிறார்; ஒப்புக்கொண்டு, கூறுகிறார்: இது சகஜம், போகப் போக எல்லாம் சரியாகிவிடும். நஷ்டம், கஷ்டம், இவை களைப் பார்த்தால் ஆகுமா? இவைகளைத் தாங்கிக்கொள்ளத் தான் வேண்டும். தம்பி, தாங்கிக்கொள்ளத்தான் வேண்டுமாம். கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டினாலும், இந்த இயந்திரத் தொழில் அமைப்பு சரிப்பட்டு வராது என்று ஸ்காயிப் எனும் பிரிட்டிஷ் நிபுணர் கூறிவிட்டார். இந்த பிரிட்டிஷ் நிபுணரை வரவழைத்து, இந்தத் தொழில் அமைப்புகளைப் பரிசீலனை செய்து கருத்துரை அளிக்கும்படி கேட்டுக் கொண்டது, நேரு சர்க்காரேதான். தாங்கிக் கொள்வதாமே தம்பி! எவ்வளவு தாங்கிக் கொள்வது ! எத்தனை ஊழல்களை, எத்துணை பொருள் நஷ் டத்தை, எத்தகைய நாற்றங்களை!