உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

213 தம்பி, செப்டம்பர் 18-இல் புது டில்லியிலிருந்து, பொதுக் கணக்க்கு கமிட்டி எடுத்துக் காட்டுவதை, சுதேசமித்திரன் வெளியிடுகிறது-படித்துப் பார். பணத்தைச் செல் அபிவிருத்தி திட்டங்களுக்குப் வழிக்கும் விஷயத்தில் சர்க்கார் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென்று பொதுக் கணக்குக் கமிட்டி தனது யாதாஸ்தில் குறிப்பிட்டிருக்கிறது. பார்லிமெண்டு அனுமதிக் கும் பணத்துக்கு மேல் ஒரு அணாகூட அதிகமாகச் செல வழிக்கக் கூடாதென மந்திரி சபைகளுக்கு மேற்படி கமிட்டி அறிவுறுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் கொடுக்க வேண்டிய கடன் சம்பந்தமாக இந்திய சர்க்கார் அந்த நாட்டுடன் உடனே ஒரு ஒப்பந்தத் துக்கு வரவேண்டுமெனக்கமிட்டி தெரிவித்திருக்கிறது (பாகிஸ் தான் இந்தியாவுக்கு 300-கோடி ரூபாய் கொடுக்க வேண் டும்.) வருமான வரி விஷயமாக சர்க்கார் காட்டியுள்ள சலுகை யையும் கமிட்டி கண்டித்திருக்கிறது. அமுக்கி வைக்கப்பட்ட பணம்சம்பந்தமாக சரியான வருமானவரி விதிக்கப்படவில்லை யென்றும், விதிக்கப்பட்ட வரியால்கிடைத்தபணம்,கிடைக்க வேண்டிய பணத்தில் 15-சதவிகிதமே யென்றும்கமிட்டிஅபிப் பிராயம் சொல்லியிருக்கிறது. பிரிட்டிஷ் கம்பெனி விஷயத்தில் சர்க்கார் கையாண்ட கொள்கையும் கண்டிக்கப்பட்டிருக்கிறது. முன்னாலே தயார் செய்த பகுதிகளைக்கொண்டு வீடு சிருஷ்டிக்கும் முறையைக் கையாளும் மேற்படி கம்பெனி கட்டிய வீடுகள் சாதாரண முறையில் கட்டப்படும் வீடுகளைவிட அதிக விலையாகியிருப் பதைப் பற்றிக் கமிட்டி குறிப்பிட்டிருக்கிறது. தேசத்துக்கு புட்டிப்பால் வாங்கி அதனால் சர்க்காருக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்டமேற்பட்டிருக்கிறது. புட்டிப்பால் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கையெடுக்கவேண்டுமென கமிட்டி கூறியிருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியத் தூதராலயங்களில் இருக்கும் இந்திய அதிகாரிகள்,பொய் சர்டிபிகேட் காட்டி அலவன்ஸ் வாங்குவதையும் கமிட்டி தீவிரமாகக் கண்டித்திருக்கிறது. 2 பவுன் முதல் வைத்து ஆரம்பித்த ஒரு உதவாக்கரை கம்பெனியோடு சர்க்கார் உடன்படிக்கை செய்து கொண்டு 17000 பவுன்களை அளித்திருக்கிறார்களென்றும், அதுவும் அந் தக் கம்பெனிக்கு டைரக்டரான ஒருவர் கையெழுத்தின்மேல் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், பணம் வாங்கின தேதி யில் தான் அவர் டைரக்டராயிருப்பதாகவும், இப்படிப் பணம்