உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

217 வீரம் தேவை - நிச்சயமாக! போர் முழக்கம் வேண்டும் அவ்வப்போது உணர்ச்சி யூட்ட! உள்ள நிலைமைக்குத் துளியும் பொருத்தமோ பொருளோ அற்ற வகையில், ஓங்காரக் கூச்சலிடுவது, சுவைக்கு உத வாது, என்பதை எடுத்துக்காட்டும் சம்பவம் ஒன்று நடை பெற்றிருக்கிறது. ஆரியர் - சமூகத்திலே அனைவராலும் வெறுத்துஒதுக்கித் தள்ளி விடப்பட்டது போலவும், கள்ளர், கயவர், கை ஏந்தி நிற்போர், ஆகியோர் எவ்வண்ணம் காரி உமிழப்பட்டும், கண்டோரால் ஏசப்பட்டும், கடிந்துரைக்கப்பட்டும், தாழ்நிலை அடைவரோ, அதுபோல ஆரியரின் நிலை ஆகிவிட்டது போலவும், அவர்களை எவ்வளவு கேவலமாக நடத்தினாலும் அடித்து விரட்டினாலும், ஏனென்று கேட்க ஒருவரும் இல்லை என்று கூறத்தக்க அளவுக்கு, ஆரியரைஅன்னியர், அக்ரமக் காரர், அகற்றப்பட வேண்டியவர்கள், விரட்டப்பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்குச் சமூகத்தில் பெரும்பகுதி யினர், அல்லது குறிப்பிடத்தக்க அளவினர் வந்துவிட்டது போலவும் எண்ணிக்கொண்டு, 'ஆரியரை நடுத்தெருவில் நாள் முழுவதும் போட்டு அடி அடி என்று அடித்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை' என்று தீட்டுகிறார்.தீ! தீ! தீ! என்று மும்முறை சொன்னதும் எந்தத் திக்கு நோக்கி கூறுகிறாரோ, அது பற்றி எரிந்து போகும் என்று எண்ணிடும் இயல்புடையவர். 'விடுதலை'யில் இந்த மணிவாசகம் வெளிவந்ததினா லேயே, இது பெரியாரின் கருத்து என்று கொண்டு விடுவதற் கில்லை. ஏனெனில், பெரியார் 'விடுதலை'யிலேயே எனக்கு விருப்பமில்லாத கருத்துக்கள் சில வேளைகளிலே வந்து விடு கின்றன, அவைகளை என் கருத்துக்கள் என்று நம்பி விடா தீர்கள். என் கையெழுத்திட்டு வெளிவரும் தலையங்கத்தில் காணப்படும் கருத்துத்தான் என் கருத்து, என்பதாகக் கூறி யிருக்கிறார். எனவே ஆரியரை நடுவீதியில் போட்டு உதைத்தாலும் ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லை என்ற அருமையான கண்டு பிடிப்புப் பெரியாருடையது என்று கூறு வதற்கில்லை! பெரியார் ஸ்தானத்தை வேகமாக எட்டிப் பிடித் திடுவதாகக் கொட்டாவி விடும் குணாளர் அவ்விதம் கருதக் கூடும்!! திரிலோகமும் புகழும் சுந்தரன்! தீரன் வீரன்! கெம்பீரன்! உதாரன்! என்று நள்ளிரவில் நாலுவீதி கேட்கும்படி உரத்தகுரலில் பாடிவிடுபவன், போர்க்களத்தில் பெற்ற அரிய அனுபவத் அ.க - 14