உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

223 இதிலே பொறிக்கப்பட்டுள்ள உருவம், பார்ப்பனருடையது என்று பார்ப்பனர் ஏன் கருதவேண்டும்? தோழர் விநாயகம் M.LA. இதைக் கேட்டார்- அந்த நேர்மையை நான் பாராட்டுகிறேன். உச்சிக் குடுமியும் பூணூலும் பார்ப்பனருக்கு மட்டும் தானா, வன்னிய குல க்ஷத்திரியரிலே சிலருக்கு இல்லையா? ஆசாரி குலத்திலே இல்லையா? என்று தோழர் விநாயகம் எடுத்துக் கேட்டதுடன், சர்க்கார் இந்த எதிர்ப்புக்கு மறுப் பளிக்காமல், முதுகெலும்பற்ற முறையில், நடந்து கொண் டதை இடித்துரைத்தார். அவர் எடுத்துக் காட்டியபடி, "உச்சிக் குடுமியும் பூணூலும்'” ஆரியரல்லாதவர்களிடமும் இருந்திடக் காண்கிறோம-பொதுவாக, பண்டைப் பெருமை யும் இந்து மத மாண்பும், உச்சிக் குடுமி பூணூல், மடிசஞ்சி போன்ற கோலத்தில் இருப்பதாகக் கருதுபவர்கள், ஆரியக் கோலத்தில் உள்ள திராவிடர்கள் இருக்கத்தான் செய்கிறார் கள். போஸ்டர், பார்ப்பனரைக் குறிப்பிட்டு அல்ல, வைதீ கத்தைக் குறிப்பதாக இருக்கிறது என்று சர்க்கார் விளக்கம் அளித்திருக்கலாம்-ஆனால் முதுகெலும்பு இல்லை,முப்புரியின ரின் கோபத்தைத் தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லை; எனவே சரணாகதி அடைகிறது! தம்பி! இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பார்ப்பன ரல்லாதாருக்கு (வேலைகள்' கொடுத்ததாம் இந்தச் சர்க்கார்- இதற்கே வெண்சாமரம் வீசுகிறோம் என்கிறார்கள் - வேடிக்கை அதுகூட அல்ல, நாங்கள் ஏன் வெண்சாமரம் வீசுகிறோம் தெரியுமா. நீ வெண்சாமரம் வீசலாம் என்று எண்ணுகிறாய், உனக்கு அந்த இடம் தரக்கூடாது, என்பதற்காகவே நாங்கள் வெண்சாமரம் வீசுகிறோம் என்று வாதாடுகிறார்களே, அது தான் வேடிக்கை. போகட்டும் வலி எடுக்கும் வரையில் வீசட் டும். ஆனால் ஒன்று? பார்ப்பனரல்லாதாருக்கு வேலைகள் கொடுத்துவிடுவதால், ஆரிய ஆதிக்கத்தை ஒழித்துவிடமுடியு மென்றால் அந்தத் திட்டத்தை மட்டுமே மலை என நம்பிவந்த ஜஸ்டிஸ் கட்சி போதுமென்று இருந்து விட்டிருக்கலாமே! ஆரிய ஆதிக்கம் என்பது அவ்வளவு எளிதாக, சிலபதவி களைப் பார்ப்பனரல்லாதார் பெறுவதன் மூலமாக மட்டுமே போகக்கூடியதுமல்ல, ஆரியரை அடித்து விரட்டுவோம், நடு வீதியில் நாள்முழுதும் அடித்தாலும் கேட்க நாதி கிடையாது என்று பேசி விடுவதால் போகக்கூடியதுமல்ல. ஆரியர் ஆதிக்கம் செலுத்துவதற்குக் காரணம், ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்லாமல், திராவிடச் சமு தாயத்தினரிடம் இன்னும் பெருமளவுக்கு இருப்பதனாலும் ஆரியத்திடம் அச்சப்படும் நிலையில் ஆளவந்தார்கள் இருப்பதினாலும்தான். எனவேதான் தம்பி! நமது