உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235

235 கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பினால், குண்டாந் தடியும் குண்டு மாரியும் புறப்படும் என்று! அஹிம்சையை அவனிக்கே போதித்த அண்ணல் காந்தி யின் ஒப்பற்ற வாரிசே, வருக! அவனி புகழும் அன்பு நெறியை, அறநெறியை, போர் வெறி கொண்டு அலையும் வல்லரசுகளுக்கும் ஊட்டி வெற்றி கண்ட, முடிசூடா மன்னா வருக! மக்களாட்சியின் மாண்பினை அறிந்து ஒழுகும் மனிதகுல மாணிக்கமே வருக! இவை போன்ற புகழ் மாலைகளை, அவர் 'பெரும்பாரம் என்று கூறத்தக்க அளவு சூட்டி மகிழ்ந்தனர், மக்கள், பெருந் தன்மையுடன். அவர்களிடம் கொதிப்பும் கொந்தளிப்பும் கிளம்பும் எனத் தெரிகிறது, எனவே உடனே அடக்கிடப் போலீசை ஏவுக! என்று கட்டளையிடுகிறார் கண்ணியர்! தம்பி! வெள்ளைக்காரன் போடும் உத்தரவுபோல இருக் கிறதே என்று கேட்கிறாயா! ஆமாம். இன்றைய டில்லி ஆட்சி நிறத்திலே சற்றுப் பழுப்பே தவிர, நடவடிக்கையிலே அதற்கு அண்ணன் என்பதை அடிக்கடி நினைவூட்ட,துப்பாக் கிச் சத்தம் கிளப்பியபடிதானே இருக்கிறது துரைத்தனம்! தந்திரம் எதாவது ஒரு பிரச்சினை எழுப்பினால், மக்கள் உள்ளத்தை அந்தப் பிரச்சினை உலுக்கினால், வெள்ளைக்கார ஆட்சிமுதலில் 'கவனியாமல்' இருக்கும், பிறகு அலட்சியமாகச் சில புத்திமதி கூறும்,பிறகு கண்டிக்கும், எச்சரிக்கை விடும்;பிரச்னைகுறித்து மக்களிடம் அக்கரை தொடர்ந்து இருக்குமானால், மக்களைச் சில காலம் செயலற்றவர்களாக்குவதற்காக ஒரு செய்யும் - அதுதான் கமிஷன் அமைப்பது என்பது! "பிரச்சினை, சிக்கல் நிறைந்தது -பலர் பலவிதமான கருத் துரை கூறுகின்றனர் - உண்மை எது பொய்யுரை என்பது விளங்கக் காணோம் - எனவே இது சம்பந்தமான எல்லா உண்மைகளையும் அறிந்து ஆய்வுரை வழங்க ஆண்டிப் பட்டி வேந்தர் தோண்டியப்பர், ஆஸ்தீக பூஷணம் ஆனந் தாச்சாரி, மவுலானா மவுலவி ஷருபுதீன், மேரிமாதா கல்லூரிப் பேராசிரியர் ஜோசப் ஆகியோர் கொண்ட கமிஷனை நியமித் திருக்கிறோம் என்று அறிக்கை வெளியிடுவர்! எது 'கமிஷன்' அமைக்கப்படுகிறது என்றால், 'பிரச்சினை' குறித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காதே என்பது மட்டு மல்ல, பேசாதே, சிந்திக்காதே, என்பது பொருள்! காலங்கடத் தும்மார்க்கம்! கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிடும் தந்தி ரம்! துரைமார் சர்க்கார் இதை அடிக்கடி கையாண்டனர்; இப் போது அவர்களே மூக்கின்மீது விரல்வைத்து ஆச்சரியப்படும்