உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

250 பேச்சிலே, காரம் அதிகம்! போக்கு, பாதுஷா போன்றது! இத்தகைய அமைச்சர் பண்டித பந்த் பவனி வருகிறார், உமது பிரதேசத்தைப் பார்வையிட வருகிறார் பராக்! பராக்! பச்சைப் பந்தல்களைப் போடுங்கள்! பாதைகளைச் செப்பனிட்டு வையுங்கள்; தோரணங்கள் கட்டுங்கள்! மலர் களை வாரித் தூவுங்கள்!மாலைகள் பலப்பல தொடுத்திடுங்கள்! அவர் அக மகிழ்வது உமக்குத்தான் நல்லது! புன்னகை பூத்த முகத்துடன் அவரை வரவேற்றால், புதுவாழ்வு கிடைத் திடும் உங்கட்கு. புகை கிளம்பக் கூடாது; பகை தெரியக் கூடாது. வருகிறவர், சாதாரண அமைச்சர் அல்ல; போலீஸ் மந்திரி! தம்பி! நாக நாடு சென்றார், டில்லியில் தர்பார் நடாத் தும் பண்டித பந்த், அவர் 'விஜயம்' பற்றிய செய்தியை மிகச் சிரமப்பட்டு அசாம் சர்க்கார் பரப்பி, பண்டிதரின் பவனியை இரம்மியமானதாக்க முயன்றனர். நாகநாடு, உனக்குத் தெரியும் - விடுதலைக் கிளர்சித் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இடம் என்பது. தீ குற்றேவல் புரிந்து கிடந்திடும் வர்க்கமல்ல நாங்கள், நத்திப் பிழைத்திட மாட்டோம்,கோடி கொட்டிக் கொடுத்தா லும் மாற்றானின் அடிவருட மாட்டோம், எமக்கு வீரவாழ்வு வேண்டும், தனி அரசு வேண்டும் என்று கூறிடும் விடுதலை வீரர்கள், அசாம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டுக் கிடக்கும் குன்றுகள் சூழ்ந்த நாகநாட்டிலே உள்ளனர். அவர்களின்விடு தலைக் கிளர்ச்சி காலை அரும்பி மாலை கருகும் என்று டில்லியில் பலமுறை ஆரூடம் கணித்தனர். எல்லா ஆருடமும்பொய்த் துப் போய்விட்டன. விடுதலைக் கிளர்ச்சி நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த வண்ணம் இருக்கிறது - ஏன் வளராது! குன்றேறி அந்நாட்டுக் குமரர்கள் காணும் தாயகத்தின் எழில், அடவிகளில் அருவிகளில், வயல்களில் வாழ்க்கை முறைகளில் தெரியும் தனித்தன்மை அவர்களைத் தன்னரசு பெற்றாகவேண்டும் என்ற ஆர்வத்தைக் கொள்ளச் செய்கிறது. பதவிக்குப் பல்லிளிக்கும் போக்கும், அடக்கு முறைக்கு அஞ்சிடும் தன்மையும், மலைக் காற்றினை உண்டு வளம்பெற்றுத் திகழும் அந்தமக்களிடம் எழமுடியாதல்லவா! தங்கத்தால் செய்த கூண்டு எனினும் தத்தை சிறையை விரும்புவதில்லையே. இரும்பை ஒடித்திடும் ஆற்றல் இல்லை என்பதையும் அறியாமல், சிறகடித்த வண்ணமல்லவா இருப்பது காண்கிறோம். பச்சைப் பசுங்கிளியே! உனக்குப் பாலும் பழமும் தந்திடுவேன்! என்று கொஞ்சினாலும் கிளியின் நினைவு