உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கை இன்பம்

17

பஞ்சை அரைத்துநூல் நூற்றுவந்தேன் - சீனி
      பாகமாய்ச் செய்து கொடுத்துவந்தேன்;
நெஞ்சம் உலர்ந்த நெடுநகரில்- குழாய்
      நீராக வும்சென்று பாய்ந்து வந்தேன். 6

மாங்கனி தேங்கனி வாரிவந்தேன்-நல்ல
      வாச மலர்களும் அள்ளிவந்தேன்;
தீங்கரும் பாயிரம் தள்ளிவந்தேன் - மிகத்
      தேனும் தினையுமே சேர்த்துவந்தேன். 7

அல்லும் பகலும் அலைந்துவந்தேன் - எங்கள்
      ஆழி இறைவனைக் காணவந்தேன்;
நில்லும் எனக்கினி நேரமில்லை - இன்னும்
      நீண்ட வழிபோக வேண்டும் அம்மா! 8

20. கடல்

[கற்களும் பாறைகளும் அடர்ந்த கடற்கரையில், கடல் கொந்தளிப்பாயிருந்த தருணத்தில், மணலிலே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கடலை நோக்கிக் கூறியது.]

எல்லை அறியாப் பெருங்கடலே! - நீதான்
     இரவும் உறங்காயோ?கடலே!
அல்லும் பகலும் அலைகடலே!- உனக்கு
    அலுப்பும் இலையோ? கருங்கடலே ! 1

உருண்டு திரண்டு வருங்கடலே ! -உடைந்து
    ஓடிப் போவதேன்? கடலே!
வெருண்டு மதிகெட் டாய்கடலே! பாறை
    விலகிப் போகுமோ? கடலே! 2