உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


என்றும்,[1] போர் முறையில் பகைவரிடம் திறைபெற்று வாழ வேண்டும் என்றும்[2] இவன் வாழ்த்தப்படுகிறான்.

படை

இவனது யானைப் படை கொங்கர்களின் பசுக் கூட்டம்போல் பெரியது. அந்த நாட்டு (தகடூர் நாட்டு) ஆட்டு மந்தைபோல் குதிரைப் படை பெரியது. தேர்ப்படைகளும் காலாட் படைகளும் எண்ணில் அடங்காதவை. இவனது படை வீரர்களில் வேற்படையினர் மிகுதி[3].

கொடைத்தன்மை

படைவீரர், தம்மிடம் வந்து இரந்தவர், இரக்க இருப்பவர், விறலியர் முதலானவர்களுக்கு இவன் கொடை வழங்கினான். கனவிலும் புலவர்கள் பிறரைக் கருதாவண்ணம் மிகுதியாக வழங்கினான். மழைபோல் வரையாது வழங்கினான்[4].

பெருஞ்சேரல் இரும்பொறை தன்னைச் சிறப்பித்துப் பாடிய அரிசில்கிழார் என்னும் புலவருக்குத் தன் அரண்மனையை அரசுரிமையோடு பரிசாகக் கொடுத்தான். தானும் தன்மனைவியும் அரண்மனைக்கு வெளியே வந்து நின்றுகொண்டு அவற்றைப் புலவருக்குக் கொடுத்தான். அவற்றுடன் தன் சொந்தப் பணமாக இருந்த ஒன்பது நூறாயிரம் காணம் பணத்தையும் அவருக்குக் கொடுத்தான். புலவர் அவற்றை ஏற்றுக்கொண்டார். பின்னர்த் தாம் பெற்ற பொருள்களை அவனே ஏற்றுக்கொண்டு ஆளவேண்டுமென்று இரந்து வேண்டினார். பெருஞ்சேரல் புலவரின் வேண்டுகோளை நிறைவேற்றி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். புலவர் அரிசில்கிழார் அதுமுதல் அவனுக்கு அமைச்சராக விளங்கி வந்தார்.

வேள்வி

இவன் நல்லோர் உரைகளைக் கேட்டுப் படிவ நோன்பு தவறாது இருந்து வேள்விகள் செய்தான்[5]. இந்த வேள்வியால் உயர்ந்தோர் (உயர்நிலையிலிருந்த பார்ப்பனர்) மகிழ்ந்தனர். இந்த வேள்வி வேட்டலில் இவனது மனைவி வேறுபட்ட கருத்துடையவளாய்


  1. ஷை 79 : 18 - 19
  2. ஷை 80 : 9 - 10
  3. ஷை 76 : 1 - 2
  4. ஷை 76 : 9 - 10, 79 : 4 - 5
  5. பதிற். 74 : 1 - 2