உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


நாட்டையும் வென்ற இவன் தன் மரபில் உள்ள முதியவர்களைத் தான் வென்ற அந்த நாட்டுப் பகுதிகளின் தலைவராக்கினான்.

மதியுறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் வைப்பின் மண்வகுத் தீத்து

என்று இச்செய்தி கூறப்படுகிறது.

(3-ஆம் பத்து, பதிகம்)

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்னும் பெயருக்கு ஏற்ப இவனிடம் பெரிய யானைப் படை இருந்தது என்று கூறினோம். அந்த யானைகளைக் கீழ்க்கடல் முதல் மேற்கடல் வரையில் வரிசையாக ஆங்காங்கே நிறுத்தி அந்த யானைகளின் மூலமாகக் கீழ்க்கடல் நீரையும் மேற்கடல் நீரையும் ஒரே நாளில் கொண்டு வரச் செய்து அந்நீரினால் இவன் திருமுழுக்குச் செய்து கொண்டான்.

கருங்களிற் றியானைப் புணர்நிரை நீட்டி

இருகடல் நீரும் ஒருபகல் ஆடி

என்று இச்செய்தி கூறப்படுகிறது.

(3-ஆம் பத்து. பதிகம்)

கொற்றவை, வீரர் வணங்கும் வெற்றிக்கடவுள். சேர நாட்டை யடுத்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி அயிரை மலை என்று பெயர் பெற்றிருந்தது. அந்த மலை மேல் கொற்றவையின் கோவில் இருந்தது. அயிரைமலைக் கொற்றவை, சேரர்களின் குல தெய்வமாக இருந்தபடியால் வெற்றிவீரனாகிய இவன் அத் தெய்வத்தை வணங்கி வழிபட்டான்.

பல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாலைக் கௌதமனார் 3- ஆம் பத்துப் பாடினார். அதற்குப் பரிசாக அப்புலவரும் அவருடைய மனைவியாகிய பார்ப்பனியும் சுவர்க்கம் பெற்றார்கள் என்று மூன்றாம் பத்து அடிக்குறிப்பு கூறுகிறது. 'பாடிப் பெற்ற பரிசில்: நீர் வேண்டிய கொண்மின்' என, 'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என, பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு ஒன்பது பெரு வேள்வி வேட்பிக்கப் பத்தாம் பெருவேள்வியில் பார்ப்பானையும் (பாலைக் கௌதமனாரையும்) பார்ப்பனியையும் காணாராயினார்' என்று மூன்றாம் பத்தின் அடிக்குறிப்பு கூறுகிறது. இவன், பாலைக் கௌதமனாருக்குச் சுவர்க்கங் கொடுத்ததைச் சோழ நாட்டிலிருந்த

,