உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


செய்து புனைந்துகொண்டு பட்டம் பெற்றமையின் 'களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்' என்னும் பெயர் பெற்றான்" என்று எழுதியுள்ளார்.

இவர் கூறும் காரணத்தைத் திரு. கே.என். நீலகண்ட சாஸ்திரி யார் உடன்படாமல் மறுக்கிறார். முடிசூடுஞ் சமயத்தில் பகைவர் வந்து கிரீடத்தைக் கவர்ந்திருக்க முடியாது என்று சாஸ்திரியார் சுட்டிக் காட்டுகிறார் (K.A. Nilakanta Sastri, A Comprehensive History of India, Vol. II, P. 521). ஆனால், சாஸ்திரியாரும் முடியும் கண்ணியும் உதவாமற் போனது ஏன் என்பதற்குக் காரணம் கூறவில்லை.

பொன்முடியும் கண்ணியும் முடிசூட உதவாமற் போனதற்குத் தகுந்த காரணம் உண்டு. அக்காரணம் என்ன வென்றால், இவனுடை தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃற டக்கைப் பெரு விறற்கிள்ளியோடு போர் செய்து போர்க்களத்தில் புண்பட்டு விழுந்து கிடந்து பிறகு உயிர் நீங்கினான் என்பதை முன்பு கூறினோமல்லவா? அவன் போர்க் களத்தில் விழுந்த சமயத்தில் அவன் புனைந்திருந்த முடியும் கண்ணியும் சிதைந்து போயிருக்கக் கூடும். அல்லது கெட்டுப் போயிருக்கக்கூடும். ஆகையினாலே, திடீரென்று முடிசூட்டுவிழா ஏற்பட்ட காரணத்தினால், அவ்வமயம் பொன்முடியும் கண்ணியும் உதவாமற் போகவே, அச்சமயத்துக்கு வாய்ப்பாகக் களங்காயாற்கண்ணியும் நாரினால் முடியும் புனைந்து முடி சூட்டப்பட்டான். இதுவே களங்காய்க் கண்ணியும் நார்முடியும் சூடியதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இவன் எக் காலமும் நார்முடியையே தரித்திருக்க வில்லை. நவமணிகள்பதித்த முத்து வடங்கள் சூழ்ந்த மணி முடியைத் தரித்துக் கொண்டிருந்தான்.

இலங்கு மணிமிடைந்த பசும்பொற் படலத்து அவிரிழை தைஇ மின்னுமிழ் பிலங்கச்

சீர்மிகு முத்தந் தைஇய

நார்முடிச் சேரல்...

(4ஆம் பத்து 9 : 14-17)

என்று இவன் கூறப்படுகிறான். ஆனாலும், நார்முடிச் சேரல் என்ற பெயரே இவனுக்கு நிலைத்துவிட்டது.

சேரமன்னர் கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப் பற்றிச் சேர இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டு வருவதைக் கண்ட கொங்கு நாட்டுத் தகடூர் மன்னனாகிய நெடுமிடல் எழினி என்பவன்