உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

வருவதற்காக வடநாடு சென்ற போது. இச்செய்தியை இவன்மேல் பாடப்பட்ட 5ஆம் பத்துப் பதிகம் கூறுகிறது.

கடவுட் பத்தினிக் கற்கோள் வேண்டிக் கானவில் கானங் கணையிற் போகி ஆரிய வண்ணலை வீட்டிப் பேரிசை இன்பல் அருவிக் கங்கை மண்ணி

என்று பதிகம் கூறுகிறது.

(5ஆம் பத்து, பதிகம்)

இதிலும் திரு. கே.எ. நீலகண்ட சாஸ்திரியார் குறை காண் கிறார். சிலப்பதிகாரம் நிகழ்ச்சிகளை அழகுபடுத்தி அலங்கரித்துக் கூறுகிறது என்று இவர்குறை கூறுகிறார். ஒரு ஆரிய அரசனை வென்றதை ஆயிரம் அரசரை வென்றதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது என்று சுட்டிக் காட்டுகிறார். சிலப்பதிகாரம் சரித்திர வரலாற்றைக் கூறுகிற காவிய நூல் என்பதைச் சாஸ்திரியார் மறந்துவிட்டு, அதைச் சரித்திரத்தை மட்டும் கூறுகிற தனி வரலாற்று நூல் என்று கருதிக் கொண்டு இவ்வாறெல்லாம் குறை காண்கிறார். காவிய நூலில் அலங்காரங்களும் கற்பனைகளும் இல்லாமற் போனால் அழகுபடுமோ? சரித்திர ஆராய்ச்சி செய்கிறவர் காவிய நூலிலே கற்பனைகளைத் தள்ளி விட்டு வரலாற்றை மட்டுங் கொள்ள வேண்டும்.

செங்குட்டுவன் கண்ணகிச் சிலைக்காக வடநாடு சென்றதும் கங்கையில் அச்சிலையை நீராட்டியதும் முதலிய செய்திகள், அவனைப் பரணர் பாடிய 5ஆம் பத்தில் கூறப்படவில்லை. பதிகம் மட்டும் கூறுகிறது. ஏன் பரணர் கூறவில்லையென்றால், அவர் செங்குட்டுவன் மேல் 5ஆம் பத்துப் பாடியபோது இந்நிகழ்ச்சிகள் நிகழவில்லை. அப்புலவர் செங்குட்டுவனுடைய தந்தை, பாட்டன் காலத்திலும் இருந்தவர். அவர் செங்குட்டுவனைப் பாடியபோது மிகுந்த வயதுள்ளவராக இருந்தார். இந்நிகழ்ச்சிகள் செங்குட்டுவனுடைய பிற்கால வாழ்க்கையில் நிகழ்ந்தவை. அப்போது பரணர் இறந்து போனார்.

சேர அரசர் தக்காண தேசத்தை யாண்ட சதகர்ணி அரசருடன் நட்புக் கொண்டிருந்தார்கள் என்பதை முன்னமே கூறினோம். செங்குட்டு வனும் சதகர்ணி (நூற்றுவர் கன்னர்) அரசருடன் நட்பாக இருந்தான். அவன் பத்தினிச்சிலைக்குக் கல் கொண்டுவர வடநாடு செல்ல