உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

195

வரலாற்றுக்குத் தக்கபடி காலத்தைக் கணிக்க வேண்டுமேயல்லாமல், இவருடைய தவறான கணக்குக்குத் தக்கபடி சரித்திர ஆதாரத்தையே மாற்றுவது சரியன்று.

இவர், தவறான கணக்குப் போட்டு அதற்குத் தக்கபடி சரித்திரச் சான்றை மாற்றுவதற்குக் காரணம் நன்றாகத் தெரிகிறது. ஒருவருக்குப் பின் ஒருவராகத் தந்தை, சிறிய தந்தை, தமயன், தம்பியர் அரசாண்டார்கள் என்று (பிற்காலத்துச் சரித்திர முறையைப் பின்பற்றி) இவர் காலத்தைக் கணித்த படியால் சிக்கல் ஏற்பட்டு இடர்ப்பட்டு அதைத் தீர்க்க மகனைப் பேரன் என்று முறை மாற்றுகிறார். இளவரசுப் பட்டம் ஏற்றது முதல் இவர்கள் ஆட்சி தொடங்கிற்று என்று கொண்டு இவர்கள் ஆட்சிக் காலத்தைக் கணக்கிட்டால் இப்படிப்பட்ட சிக்கலும் இடர்ப்பாடும் நேர்ந்திராது. மேலே நாம் கணித்து முடிவு செய்த ஆட்சிக் காலங்களில் இவ்விதச் சிக்கல்கள் இல்லாதிருப்பது காண்க. எனவே, செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஏறத்தாழக் கி.பி. 130 முதல் 185 வரையில் அரசாண்டான் என்று கொள்ளலாம்.

இனி, 'சேரன் செங்குட்டுவன்' என்னும் நூலை எழுதிய திரு. மு. இராகவையங்கார் அவர்கள் செங்குட்டுவன் கால ஆராய்ச்சி என்னுந் தலைப்பில் சில செய்திகளைக் கூறிச் செங்குட்டுவன் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று கூறுகிறார். சமுத்திர குப்தன் என்னும் அரசன் மாந்தராசன் என்பவனை வென்றான் என்று ஒரு சாசனம் கூறுவதைச் சான்று காட்டி, அதில் கூறப்படுகிற மாந்தராசன் மாந்தரஞ் சேரல் என்றும், ஆகவே சமுத்திரகுப்தனால் வெல்லப்பட்ட மாந்தராசா (மாந்தரஞ் சேரல்) காலத்தில் இருந்த செங்குட்டுவன் காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என்று இவர் கூறுகிறார். இவர் கூறுவது வருமாறு:

வடநாட்டில் மகத நாடாண்ட ஆந்திர சக்ரவர்த்திகளது வீழ்ச்சிக்குப் பின் பிரபலம் ஏற்று விளங்கிய குப்த வமிச சக்கரவர்த்தி களுள்ளே சமுத்திரகுப்தன் என்பான் திக்விஜயஞ் செய்து, இப்பரத கண்ட முழுவதையும் தன் வெற்றிப்புகழைப் பரப்பினான் என்பது சாசன மூலம் அறியப் படுகின்றது. இம் மன்னர் பெருமான் கி.பி. 326 இல் பட் மெய்தியவன். இவனது தென்னாட்டுப் படையெழுச்சியில் ஜயிக்கப்பட்ட வேந்தருள்ளே கேரள தேசத்து மாந்த ராஜா ஒருவ னென்று கூறப்படுகின்றது. இம்மாந்தராஜா என்பவன் சங்க நுல்களிற் கூறப்படும் மாந்தரன் என்பவனாகவே தோற்றுகின்றான். ஆனால்,