உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

245

அவள் வீட்டுக்கு அனுப்பினார். கோவலனும் கண்ணகியும் மாதரியின் குடிலில் தங்கினார்கள். மாதரியின் மகள் ஐயை என்னுஞ் சிறுமி கண்ணகிக்குத் தோழியாக இருந்தாள்.

அடுத்த நாள் கோவலன், கண்ணகியின் காற்சிலம்பை விற்கப் போனான். போகும்போது வீதியில் பாண்டியனுடைய பொற் கொல்லன் தற்செயலாக வருவதைக் கண்டு அவனிடம் சிலம்பை விற்பதற்குக் காட்டினான். அயல்நாட்டான் ஒருவன் வறுமையான நிலையில் அதிக விலைமதிப்புள்ள பொற்சிலம்பை விலை கூறுவதைக் கண்டு பொற்கொல்லன், தான் முன்பு பாண்டிமா தேவியின் காற்சிலம்பைச் செப்பனிடுவதற்காகக் கொண்டு வந்தவன் அதனைத் திருப்பிக் கொடுக்காமல் களவாடிக் கொண்டவனா தலின், தன் களவுக் குற்றத்தை இப்புதியவன் மேல் சுமத்த இதுவே தக்க சமயம் என்று கருதினான். ஆகவே, கோவலனைத் தன் இல்லத்தின் அருகில் இருத்தித் தான் சிலம்பை விலைபேசி வருவதாகச் சொல்லிப் போனான்.

போனவன், அரசியின் பொற்சிலம்பைக் களவாடிய கள்ளன் தன்னிடம் வந்து அதை விலைபேசி விற்க வந்திருக்கிறான் என்று கூறி அரசனை நம்பச் செய்தான். அரசன், அக்காலத்துச் சட்டப்படிக் கள்ளனைக் கொல்ல வேண்டிய முறைப்படி வீரர் சிலரை அனுப்பிக் கள்ளனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வரும்படி கட்டளை யிட்டான். வீரர்களை அழைத்து வந்த பொற்கொல்லன் கோவலனைக் கள்ளன் என்று காட்ட, அவர்கள் அவனை வெட்டிவிட்டனர்.

பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய குற்றத்துக் காக அயல்நாட்டான் ஒருவன் கொலை செய்யப்பட்ட செய்தி நகரம் முழுவதும் பரவியது. அச்செய்தி கண்ணகியின் செவிக்கும் எட்டியது. களவுக் குற்றஞ் சாற்றிக் கொலை செய்யப்பட்டவன் தன் கணவனே என்று அறிந்ததும் அவள் மனம் துடித்தது. துன்பமும் துயரும் அவள் மனதைச் சூழ்ந்து கொண்டன. பெருந்துக்கத்தில் மூழ்கினாள். பதை பதைத்துப் புலம்பிக் கொண்டு கோவலன் வெட்டுண்டு கிடந்த இடத்துக்குச் சென்று அவனைத் தழுவிக் கொண்டாள். வாய்விட்டு அலறிப் புலம்பினாள். அந்த நிலையில் தன் கணவனுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமையொன்று தன்மீது இருப்பதை யுணர்ந்தாள். தன் கணவன் கள்வன் அல்லன், அத்தகைய இழி செயல் செய்தவன் அல்லன், அவன் பொய்யாகக் களவுக் குற்றம் சாற்றப்பட்டு