உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




302

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1

மிகச் சிறப்பாக நடந்ததாகத் தெரிகிறது. சோழன் கரிகாலன் அந்த விழாவுக்குத் தன்னுடைய சுற்றத்தோடு வந்து கண்டு மகிழ்ந்தான்.27

போர் (போரூர்,போர்வை)

இவ்வூர் போரூர் என்றும், போர்வை என்றும், திருப்போர் என்றும் கூறப்பட்டது. இது சோழநாட்டில் காவிரி ஆற்றங்கரை மேல் இருந்தது. இவ்வூரில் கொங்குச் சேரருக்கும் சோழருக்கும் வெவ்வேறு காலத்தில் பல போர்கள் நடந்தன. இவ்வூரில் பழையன் என்னும் சிற்றரசன் ஆண்டுவந்தான்.28 இவன் சோழ அரசர் சார்பில் நாடு காவல் பணி பூண்டிருந்தவனாவான்.

பொத்தி

இது சோழநாட்டிலிருந்த ஓர் ஊராகும். பெருஞ்சோழன் என்பவன் இவ்வூரை அரசாண்டான். இவ்வூரில் இருந்த புலவர் பொத்தியார் என்று பெயர்பெற்றார். பெருஞ்சோழன் வடக்கிருந்து (உண்ணா நோன்பிருந்து) உயிர்விட்டபோது அவனுடைய நண்பரான இந்தப் பொத்தியாரும் அவனுடன் வடக்கிருந்து உயிர்விட்டார். 29 தலைச்செங்காடு

தலைச்செங்காடு என்னும் இவ்வூர் தலைச்செங்கானம் என்றும் கூறப்படும். காவிரிப்பூம்பட்டினத்துக்குத் தென்மேற்கே இது உள்ளது. இவ்வூரில் மாடலன் என்னும் மறையவன் இருந்தான். அவன் உலகியலை நன்கு அறிந்தவன். காவிரிப்பூம்பட்டினத்தில் கோவலன் இருந்த காலத்தில் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் மாடலன் நன்கு அறிந்திருந்தான். குமரி, காசி (கங்கை) முதலான ஊர்களுக்குச் சென்று இவன் நீராடி மீண்டான். சேரன் செங்குட்டு வனுக்கும் இவன் நண்பனாக இருந்தான். கோவலன், கண்ணகியுடன் மதுரைக்குச் சென்று கவுந்தியடிகளுடன் இருந்தபோது மாடலன் குமரியில் நீராடிச் சோழ நாட்டுக்குத் திரும்பிவரும் வழியில் மதுரையில் தற்செயலாக அவர்களைச் சந்தித்தான். கண்ணகிக்குச் செங்குட்டுவன் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்தபோது அவ் விழாவுக்கும் சென்றிருந்தான். 27.60 376: 4 - 10

28. அகம். 186:15

29. புறம். 217, 220, 221, 222 (சேலம் மாவட்டம் காவிரியின் வடகரையிலுள்ள பொத்தனூர் இந்த ஊராயிருக்கலாம்.