உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

379

செய்திகளைச் சொல்வதில் தழுவியும் நழுவியும் செல்வதைப் பார்க்கும்போது வெவ்வேறு நிகழ்ச்சிகள் என்றே கொள்ளத்தகும்.

இவை ஒருபுறம் இருக்க இவ் வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிக்கும் புலவர்களையும் எண்ணுவோம். சங்க காலத்து நிகழ்ச்சியைப் பாடிய புலவர் பொய்கையார். இவர் கோக்கோதை மார்பனைப் பாடியுள்ளார்.25 மற்றும் 'பொறையன்' என்னும் சேர அரசனையும் குறிப்பிட்டுள்ளார்26 இந்தப் பொறையன் கணைக்கால் இரும்பொறைதான் என்று அறுதியிட்டுக் கூறமுடியாவிட்டாலும் பெயர் ஒப்புமை கருதி ஓரளவு ஏற்கத்தான் வேண்டும். ஆயின், இந்தக் கோதை மார்பனின் படைத்தலைவன் பிட்டன் என்று வரலாற்றுப் படி முடியும். பிட்டன் காலம் வேறு; கோச் செங்கணான் காலம் வேறு. முன்னது சங்ககாலத்தின் இடைப்பகுதி; பின்னது கடைப்பகுதி. மற்றும் கோக்கோதை மார்பன் பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரமன்னன் என்று கொள்வது பொருத்தமானது என்று அவர்களது வரலாற்றில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பொய்கையாருக்கும் கோச்செங்கணானுக்கும் தொடர்பில்லை எனல் சாலும். மற்றுக் களவழி நூலைப் பாடிய புலவரும் பொய்கையார் என்றாலும், களவழிப் பாடலில் காணப்படும் நடைவேறுபாட்டை எண்ணி அவர்களை வெவ்வேறு பொய்கையார் என்று கொள்ளலே தகும். மற்றும், மூன்றாவது நிகழ்ச்சியோடு தொடர்புடைய பொய்கை யாரோ ஆழ்வார் (திருமால் அடியவர்). புலவர் தொடர்பான இந்த வேறுபாடுகளும் இவர்களை வெவ்வேறு காலத்தவராகவே கொள்ள வைக்கின்றன.

27

இந்த வரலாறு மூவேறு நிகழ்ச்சிகளாகக் கொள்ளத்தக்கது. செங்கணானுக்கு நல்லடி என்று ஒரு மகன் இருந்தான் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் குலத்தில் நல்லடி என்றும் ஒருவர் இருந்தார். சோழநாட்டைக் களப்பிரர் கைப்பற்றி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஏறத்தாழக் கி.பி. 250 அளவில் களப்பிரர் தமிழகத்தைக் கைப்பற்றினார்கள். அவர்களுக்குச் சோழநாடும் கீழ்ப்பட்டது. சேர

25. புறம். 48,49

26.நற்.18:5

27. 'கடும்பகட்டு யானைச் சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி யுள்ளா னாகவும் ஒன்னார்' (அகம். 356 : 12 - 14