உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பண்டைத் தமிழக வரலாறு சேரர், சோழர், பாண்டியர்

13

399

பொய்கைகள் இங்கிருந்தன. சிலம்பாறு அல்லது நூபுரகங்கை இம் மலையில் தோன்றிப் பாய்ந்தது.

சுமார் 16 கி. மீ. நீளமுள்ள இம் மலைகளின் குகைகளில் பல சமண முனிவர்கள் வாழ்ந்தனர்.

திருப்பரங்குன்றம்

சங்ககாலத்துப் புலவர்களால் சிறப்பித்துப் பாடப்பெற்ற தெய்வம், திருப்பரங்குன்றத்து முருகனாகும். இக் குன்றத்தின் உச்சியில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளில் முனிவர்களின் கற்படுக்கை களும் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள தாமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் சங்க காலத்திய நல்லந்துவனார் பெயர் காணப்படுகிறது.14

ஆனைமலை

சங்கச் செய்யுள்களில் ஆனைமலையைப்பற்றி ஒன்றும் சொல்லப் பெறவில்லை. எனினும் ‘சங்க கால எழுத்துகள் இம்மலையில் உள்ளன. பறம்பு மலை

பாண்டிய நாட்டில் இருந்த இம் மலைக்குத் தலைவன், பாரி வள்ளலாகும்.

பொதிகை மலை

பொதியில், பொதியம் என்று வழங்கப்பெறும் இம் மலைக்குத் தென்னவன் பொதியில், ஆய்பொதியில் என்னும் பெயர்கள் வழங்கப் பெறுவதால், இது பாண்டிய நாட்டு மலை என்பது தெளிவாகும். சங்கப் புலவர்களில் ஒருவராகிய அகத்தியர் பொதிகை மலையில் இருந்ததாகக் கூறப்படும் கதை கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றியது. சிலப்பதிகாரத்தில் கூறப்பெறும் பொதியில் முனிவர் அகத்தியர் அல்லர். வடமொழியில் உள்ள பாகவத புராணத்தில் பொதிகை மலையில் மலயத்து வச பாண்டியன் தவம் செய்ததாகக் கூறுகிறதே யன்றி, அகத்தியர் தவம் செய்ததாகக் கூறவில்லை.

13. சிலப். 11:94-97

14. இந் நூலின் அடிப்படைச் சான்றுகள் - 11, கல்வெட்டு வரிசை எண் 44 முதல்

46 62160