பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
247
வென்று வாதாபி நகரத்தின் நடுவில் வெற்றித் தூணைக் கைக்கொண்டவனுமாகிய நரசிம்மவர்மன், மகேந்திரவர்மனுக்கு மகனாகப் பிறந்தான்.”[1]
காசாகுடி செப்பேட்டுச் சாசனம் இவ்வாறு புகழ்கிறது: “அவனுக்கு (மகேந்திரவர்மனுக்கு) வெற்றி வீரனாகிய நரசிம்மவர்மன் பிறந்தான். இவன், இலங்கையை வென்று, இராமனுடைய வீரப்புகழுக்கு மேம்பட்ட புகழை யடைந்து, பகைவர்களுக்குத் தூமகேதுவைப் போல இருந்து, குடமுனியைப்போல வாதாபியை வென்றான்.”[2] (குடமுனியாகிய அகத்தியர் வாதாபி என்னும் அசுரனை வென்றது போல இன்னும் சளுக்கியரின் வாதாபி நகரத்தை வென்றான் என்பது கருத்து.)
புலிகேசியின் மகனான முதலாம் விக்ரமாதித்தியனுடைய கர்நூல் செப்பேட்டுச் சாசனம், “மூன்று அரசர்கள் சேர்ந்து புலிகேசியை வென்றார்கள் என்று கூறுகிறது.”[3] புலிகேசியைவென்ற மூன்று அரசர்களில் மாமல்லனாகிய நரசிம்மவர்மன் ஒருவன். மற்ற இருவரில் மானவம்மமா என்பவன் ஒருவன். இவன் இலங்கையரசுக்கு உரியவனாய் அரசு இழந்து நரசிம்மவர்மனிடம் வந்து அடைக்கலம் புகுந்து காஞ்சிபுரத்திலேயே நெடுங்காலம் இருந்தவன். இவன் நரசிம்மவர்மனுடன் சேர்ந்துப் புலிகேசியுடன் போர்செய்தான் என்று சூலவம்சம் (47-ஆம் அதிகாரம்) என்னும் நூல் கூறுகிறது.[4] நரசிம்மவர்மனுக்கு உதவியாக இருந்த இன்னொரு அரசன் புதுக் கோட்டையைச் சேர்ந்த கொடும்பாளூரில் இருந்த சமராபிராமன் என்பவன். இந்தச் சமராபிராமன், சளுக்கிய அரசனை அதிராஜ மங்கலம் என்னும் ஊரில் கொன்றான் என்றும், இவனுடைய தகப்பனான பரதுர்க்கமர்த்தனன் வாதாபி நகரத்தை வென்றான். என்றும் கொடும்பாளூரில் உள்ள மூவர் கோவில் சாசனம் கூறுகிறது.[5]
இதில், சளுக்கிய அரசனை அதிராஜமங்கலத்தில் சமராபி ராமன் கொன்றான் என்பதை, சளுக்கிய அரசனான புலிகேசியை அதிராஜ மங்கலம் என்னும் மணிமங்கலத்தில், சமராபிராமன் கொன்றான் என்று
- ↑ 1. Velurpalayam Plates of Vijaya Nandivarman S. I. I. Vol. II. P. 501-517.
- ↑ 2. Kasakudi Plates of Nandivarman, Pallava Malla. S. I. I. Vol. P. 342-361.
- ↑ 3. Karnul Plates of Vikramaditya I, B. B. R. A. S. XV. I. P. 226.
- ↑ 4. No. 14.P.9-10. Inscriptions (Texts) of the Pudukkottai State. No.14. Chronological List of Inscriptoins of the Pudukkottai State.
- ↑ 5. Ind. Atni. Vol. IX. P. 199.