பண்டைத் தமிழக வரலாறு கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு
263
இந்தச் சாசனத்தின் வடமொழிப்பகுதி இவ்வாறு கூறுகிறது:
"கும்பசம்பவன் (அகத்திய முனிவர்) கையினால் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மன்னர்கள் அரசாண்டு கழிந்த பின்னர், மூவுலகத்தாலும் போற்றப்பட்ட நற்குணங்களையும் புகழையும் உடைய மாரவர்மன் என்னும் அரசன் பிறந்தான். இவன், ஆதிசேஷன் போன்ற தனது பெருந்தோளினால் பூபாரத்தை நெடுங்காலந்த தாங்கிக் கொண்டு, ஆதிசேஷனுடைய இளைப்பை மாற்றினான். புலவரைக் காத்த இவன் போர்க்களத்திலே பகைவர் கூட்டத்தை வென்று அமிர்த் கர்ப்பத்தில் பிறந்து (இரணிய கர்ப்பம் புகுந்து) முறைப்படி பொற்குவியலைத் தானம் செய்தான்."7
சின்னமனூர் சிறிய செப்பேட்டுச் சாசனம் இவனை இவ்வாறு கூறுகிறது :
15. "பகைப் பூபர் தலைபனிப்பப் பரமேஸ்வரன் வெளிற் பட்டு அரிகேச
16.ரி அஸமஸமன் அலங்க்யவிக்ரமன் அகாலகாலன் னெனத்தன
17. க்குரியன பலகுண நாம்முலகுமுழு துகந்தேத்தப் பரா
18. வனிபகுல மிறைஞ்சப் பாரகலம் பொதுநீக்கித் தராசுரர
19. திடரகலத் தனவர்ஷம் பொழிதற்கு வலாஹத்தின் விரதம்கொண்
20. டு துலாபார மினிதேறி ஸரண்யனா யுலகளித்து ஹிரண்ய
21. கர்ப்ப மிருகால் புக்கு கோஸஹஸ்ரத் துடக்கத்துக் குருதா
22. 'னம் பல செய்து வாசவன்போல வீற்றிருந்தனன் வஸு
23. தாபதி மாரவர்மன்"8
மாரவர்மன், பல அரசர்களைப்போரில் வென்றதோடு சேர அரசனையும் வென்று அந்நாட்டைத் தன் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான். ஆகையால் இவன் பரமேசுவரன் என்றும் கூறப்படுகிறான்.