உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ண்டைத் தமிழகத்தில் கொங்குப் பகுதி தனித் தன்மைகளோடு
விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்
கொங்குப் பகுதிகள் குறித்துச் செய்த ஆய்வுகள்
இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித்
தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார்.
அவற்றிலிருந்து மன்னர்கள் குறித்த வரலாறுகள் மட்டும்
இத்தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. பாண்டியர்கள் குறித்த
தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இலங்கை தமிழர் வரலாறு குறித்துப் பல இடங்களில்
மயிலை சீனி அவர்கள் எழுதியுள்ளவை இத்தொகுதியில்
இணைக்கப்பட்டுள்ளது.