92
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
பெயர் பெற்றிருக்கின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொற்கையிலிருந்த பாண்டிய இளவரசன் வெற்றிவேற்செழியன்.
கொற்கைப் பட்டினம் துறைமுகப்பட்டினமாக இருந்தது மல்லாமல், அங்கு முத்துக்களும் சங்குகளும் விற்கப்பட்டன. கொற்கைக் கடலில் முத்துச் சிப்பிகளும் சங்குகளும் உண்டான படியால் இங்கு முத்துக் களும் சங்குகளும் கிடைத்தன.
குமரி
இது பாண்டி நாட்டின் தெற்கே குமரிக் கடலில் இருந்தது. கன்னியாகுமரி என்றுங் கூறப்படும். இது துறைமுகப்பட்டின மாகவும் புண்ணியத் தீர்த்தமாகவும் இருந்தது. இந்தத் துறை முகத்தைத் தாலமி, பெரிப்ளூஸ் என்னும் கிரேக்கர்கள் குறிப் பிட்டுள்ளனர். கொமரா, கொமராய், கொமரியா என்று அவர்கள் குமரியைக் கூறியுள்ளனர். இத் துறைமுகத்தைக் 'குமரியம் பெருந்துறை' என்று மணிமேகலை கூறுகின்றது. பாண்டியனைக் 'கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்' என்று சிலம்பு கூறுகின்றது. பிற்காலத்தில் இராமேசுவரம் புண்ணிய தீர்த்தமாகக் கருதப்படுவதற்கு முன்பு கொற்கைத் துறை புண்ணிய தீர்த்தமாகக் கருதப்பட்டு, கங்கையில் நீராடினவர் குமரிக்கு வந்து நீராடிச் சென்றார்கள். பிற்காலத்தில் இந்தத் துறைமுகத்துக்கு வாணிகக் கப்பல்கள் வருவது நின்று போயிற்று. கொற்கைத் துறைமுகத்துக்கு அப்பால் கொற்கை என்னும் ஊர் இருந்த தென்றும், அங்குக் கோட்டைகள் அமைந்திருந்தன வென்றும், அங்கு ஒரு கப்பல் தொழிற் சாலையிருந்ததென்றும் பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் கூறுகின்றது.
1.
2.
அடிக்குறிப்புகள்
(Hoard of Roman Coins in a pot Latest recond of Coin of Antonius piu (S.A.D. 161) Asiatic Researches. II (1970. P.P. 331-32).
Arikamedu; (An Indo - Roman Trading - Station on the east coas of India'. PP.17 - 124. Ancient India. Number 2. July 1946).