உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 27

சைவ, வைணவ மதங்கள் தலித்துகளை எப்படிப் பார்த்தன?
சைவ, வைணவர்கள் பக்தி இயக்க எழுச்சிக் காலத்தில் சமண, பௌத்த மதங்களைச் சாய்ப்பதற்காக 'ஒரு வகையான சனநாயகத் தன்மையினை” தற்காலிகமாகக் கொண்டிருந்தனர். முதலிலே சைவர்களும், வைணவர்களும் தலித்துகளை எப்படிப் பார்த்தார்கள் என்பதில் வேறுபாடுகள் உண்டு. சைவத்திலே நந்தனார் சோதியாகத் தான் சிதம்பரம் கோயிலுக்குள்ளே போக முடிந்தது. வைணவத்திலே திருப்பாணாழ்வாரை தோளிலே தூக்கிக் கொண்டு ஒருவர் திருவரங்கம் கோயிலுக்குள்ளே செல்கிறார். இந்த வித்தியாசம் இருக்கிறதே இது என்னவென்று கேட்டால் "நீ சைவனா பிராமணனா” என சிவப் பிராமணரிடம் கேட்டால் அவர் திண்டாடிப் போவார். ஆனால் தத்துவார்த்த ரீதியாக வைணவனா? பிராமணனா என ஒரு வைணவரிடம் கேட்டால் ஒரு உண்மையான வைணவர் "நான், பிராமணனல்ல சொல்லுவார். அண்மையிலே வைணவர்” எனத் தைரியமாகச் வந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலே “வருணாசிரமத்தைக் கடைப்பிடிக்கிறவர்" என்று சங்கராச்சாரியைத் தாக்குகிறார். இராமானுஜ தாத்தாச்சாரியார். "வருணதர்மிகள் தாசவிருத்திகள் என்று துறை வேறு இடுவித்தது" என்ற ஆசாரிய ஹிருதயம் (மாறன் மனம் என்று. பொருள்படும் 13-ஆம் நூற்றாண்டு வைணவத் தத்துவ நூல்) நூற்பாவை வைத்துக்கொண்டுதான் தாத்தாச்சாரியார் தாக்குகிறார். வருணாசிரம தருமத்தை மேற்கொள்ளும் ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் குளிக்கும் வைணவர்கள் குளிக்கமாட்டார்கள்". என்பதுதான் துறையிலேகூட இதன் பொருள். ஒடுக்கப்பட்டவரின் கோயில் நுழைவு இராமானுசரால் முதன் முதலில் மைசூரிலுள்ள மேல் கோட்டையிலே நடத்தப்பட்டது. அது தொடர்ந்து வரமுடியவில்லை என்பது வேறு விசயம். ஆனால் ஒரு நல்ல வைணவன் பிராமணனாக இருக்க முடியாது என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார். "நான் பிராமணன் இல்லை. நான் என் பிராமணத் தன்மையினைக் கைவிட்டு விட்டேன்", என்று ஏழாம் நூற்றாண்டிலேயே அவர் கூறுகின்றார். வைணவத்திற்குள்ளே சாதிக்கு எதிராகவும். வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஒரு கலகக் குரல் தொடர்ந்து வருகின்றது. அது பலவீனமாக இருந்திருக்கிறது. பார்ப்பனர்களிலே சிலபேர் வைணவர் இப்போது வைணவப் என்பதை விட்டுவிட்டுப் பார்ப்பனர் என்ற உணர்வோடு இந்து என்ற கருத்தாக்கத்திற்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று தலித்துகளைப் பொறுத்தவரையில் இராமானுசர் பார்வையும், வைணவ தத்துவப் பார்வையும் வேறு. நடைமுறை வேறாகத்தான் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/28&oldid=1674935" இலிருந்து மீள்விக்கப்பட்டது