28 'இந்து' தேசியம்
ஆனால் நடைமுறையிலே ஒன்றைச் சொல்லலாய். சங்கராச்சாரியார் யாருக்கு தீட்சை கொடுப்பார்? சைவ மடம் யாருக்கு தீட்சை கொடுக்கும்? பிறப்பினாலே சைவ சமயத்தை சார்ந்தவருக்குத்தான் தீட்சை கொடுக்கும். ஆனால் வைணவ மதம் தாழ்த்தப்பட்டோருக்கும் தீட்சை கொடுக்கும் வழக்கம் இன்றுவரை நடைமுறையிலிருக்கிறது. ஒரு தாழ்த்தப்பட்டவர் வைணவ தீட்சை பெற்று வைணவராகலாம். தீட்சை பெற்று வைணவரானவுடன் தீட்சை பெற்றவர்கள் யாரும் யாருடைய சாதியையும் கேட்கக் கூடாது. ஒன்றாகச் சமைத்து ஒன்றாகச் சாப்பிட வேண்டும். இந்த தாராள மனப்பான்மை சைவத்திலே கிடையாது. இதுதான் பார்வையிலே வித்தியாசம். ஆனால் இன்று எல்லோருமே "இந்து" என்ற போர்வையிலே தலித்துக்களை வெறுப்போடு தள்ளிவைத்துப் பார்க்கும் பார்வைதான் உள்ளது. இராமானுசரின் சாதி எதிர்ப்புக் குரல் தோற்றுப்போய்விட்டது.
நீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் கோயில் என்ற அமைப்பே சாதிகளைக் காப்பாற்றும் முறைபோன்று தோன்றுகிறதே?
ஆம். 1949-இல் கோயில் நுழைவுச் சட்டம் வருகிற வரைக்கும் கோயில் என்ற நிறுவனம் சாதியை முழுமையாகக் காப்பாற்றும் அமைப்புத்தானே. கோயில் நுழைவுச் சட்டம் என்பது தடை செய்யப்பட்ட சாதியார் கோயிலினுள் நுழையலாம் என்பது தானே! இவர்களைத் தடை செய்து வைத்தது எது? கோயில் தானே. இன்றைக்கு நாம் அனைவரும் உள்ளே போய் வணங்கினாலும் மதுரை வீரன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்திற்கு வெளியேதான் இருக்கிறது. அதே போல மதுரை வீரனை சாதியார் கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
கோயில் சாதியைக் காப்பாற்றினால் அது வருணாசிரம தருமத்திற்கு கட்டுப்பட்டது என்று தானே அர்த்தம்?
இல்லை. வருணாசிர தர்மம் என்பது தமிழ் நாட்டிலே ஒரு போதும் நடை முறையிலே இருந்ததில்லை. வருணாசிரம தருமட்டடி பிராமணர்களுக்கு அடுத்தபடி இருப்பவர்கள் வைசியர் என்று அழைக்கப்படுகிற வணிகச் சாதியார். அந்த வணிகச் சாதியாருக்கு கோயிலிலே எங்காவது இடம் இருக்கிறதா? இல்லை. அடுத்து சத்திரியர் என்று சொல்லப்படக்கூடிய போர்க்குணமுடைய சாதியர். அவர்களுக்கு எங்காவது இடம் இருக்கிறதா? வேளாளர் என்று சொல்லக்கூடிய