உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொ.பரமசிவன் 53

உள்நாட்டு மக்களின் மத உணர்வுகளைச் சீண்டிவிடக் கூடாது என்பதில் அது முன்எச்சரிக்கை உணர்வுடன் 1817 வரை நடந்து கொண்டது. இந்த காலப் பகுதியினை அரசு ஆவணங்கள் நடுநிலைக் காலம் (Period of Nuturality) என்று குறிப்பிடுகின்றன. இக்காலத்தில் கம்பெனி அரசாங்கம் கோயில் நிலங்களுக்குரிய வரியினை மட்டும். பெற்றுக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், கோயில் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்பட்ட போதெல்லாம் வருவாய் ஆணையத்தின் (Board of Revenue) ஆணையைப் பெற்றே நடவடிக்கை எடுத்தனர்.
வடஇந்தியாவை விட பார்க்கத் தமிழ்நாட்டில் பெருங்கோயில்களும் மடங்களும் எண்ணிக்கையில் மிகுதி. விளை நிலங்களில் 90% இவற்றுக்கு உரியதாகவே இருந்தன. இக்கோயில்கள் அனைத்தும்,பார்ப்பனர்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கி வந்தன. (விதி விலக்காகச் சில மடங்களும், விளைநிலங்களும் வேளாளர் கையில் இருந்தன). சொத்துடைமை நிறுவனமான கோயில் வழியாகப் பார்ப்பனர்கள் பெருந்திரளான மக்களின்மீது தங்களின் அதிகாரத்தைச் செலுத்த முடிந்தது. கோயிற்பணியாளர் வரிசையிலும் இசைக்காரர், கொத்தர், தச்சர் தவிர அருச்சகர், பரிசாரகர், மடைப்பள்ளியார், ஸ்தலத்தார் என்று பார்ப்பனர்களே எண்ணிக்கையிலும் மிகுதியாக இருந்தனர். எனவே அரசு என்னும் நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே வாய்ப்பிருந்தது. பெருந்திரளான மக்களின் கையில் இருந்த ஒரே நிறுவனம் உள்ளூர்ச் சாதிக்குழு (Local Caste As- sembly) மட்டுமே. சொத்துடைமையற்ற இந்தக் குழுக்களுக்கு வேறு வலிமை ஏதும் இல்லை. இவை வட்டார அளவில் சடங்குகளால் பிணைக்கப்பட்டவை மட்டுமே. இந்தப் பின்னணியில்தான் 1817இல் காலனி அரசு கோயில்களையும் மடங்களையும் ஒழுங்குப்படுத்தும் (Regulations VII of 1817) சட்டத்தைக் கொண்டு வந்தது.
1830-களில்தான் பத்திரிகைகள், பொதுக்கல்விப் பள்ளிகள் என்னும் புதிய சமூக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அறிமுகமாயின. அதற்கு முன்னர் ஐரோப்பிய மிஷனரிகள் தங்கள் முயற்சியில் சிறிய அளவிலான கல்வி முயற்சிகளைச் செய்திருந்தனர். சென்னையை மக்கள் கணிசமான அளவு கிறித்துவத்தைத் தழுவியிருந்தனர். எனவே அடுத்து தென்தமிழ்நாட்டின் திருநெல்வேலிப் பகுதியில் ஒடுக்கப்பட்ட மேல் சாதியினரின் நடுவில் அரசதிகாரம் பிற மதத்தினரின் கையில் இருப்பது ஓரளவு உணரப்பட்டது. மறுதலையாக சில மிஷனரிகள் முயற்சியால், கிறித்துவர்களாக மாறிய தாழ்த்தப்பட்ட மக்களை பழைய வழக்கப்படி ஊர்க்கோயில் திருவிழாக்களில் ஊழியம் செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/54&oldid=1689589" இலிருந்து மீள்விக்கப்பட்டது