உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்து தேசியம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 'இந்து' தேசியம் ஒப்பந்தம் ஏற்பட தங்களால் ஆன எல்லா முயற்சிகளும் செய்வதாகக் காந்தியடிகளிடம் உறுதியளித்தனர். அன்று (22.09.1932)பிற்பகல் சிறையில் இருந்த காந்தியடிகளைச் சந்திக்க டாக்டர் அம்பேத்கார் தன் நண்பர்களுடன் வந்து சேர்ந்தார். மகாத்மாவே, எங்களிடம் நீங்கள் நியாயமில்லாமல் நடந்து கொள்கிறீர்கள் (Mahatmaji, you have been very unfair to us) என்று அம்பேத்காரே பேச்சைத் தொடங்கினார். பேச்சு வார்த்தையின் போது ஒரு விசயத்தை மட்டும் அவர் திரும்பத் திரும்பக் கூறினார். எல்லோருக்கும் அந்த வாக்கியம் மீண்டும் மீண்டும் கேட்டது. 'எனக்கு (எங்களுக்கு) உரிய நட்டஈடு வேண்டும்' (I want my compensation) என்பது தான் அது. காந்தியடிகள் முதல் நிலைத் தேர்வுக்குழு (Panel) திட்டத்தைத் தான் ஏற்றுக் கொண்டால் அது தாழ்த்தப்பட்டவர்களைப் பிளவுபடுத்தும் என்று அவரிடம் தன் கருத்தை விளக்கினார். அம்பேத்காரும் அவருடைய நண்பர்களும் காந்தியடிகளின் அன்புப்பிடியில் இறுகிப் போயிருந்தனர். அம்பேத்கார் மனத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 'மகாத்மாவே கூட்டுத் தொகுதி முறையை ஏற்றுக் கொண்டு நான் உங்களுக்குச் சலுகை அளித்து விட்டேன்' என்று அம்பேத்கார் கூறினார். மற்ற விசயங்களைப் பற்றி வெளியில் உள்ளவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துமாறு காந்தியடிகள் கூறினார். இதற்கிடையில் பம்பாயில் கூடிய இந்துமகாசபைக் கூட்டத்தில், ' வகுப்புவாரித் தீர்ப்பினை நிறுத்தி வைக்குமாறு கடிதங்களும் தந்திகளும் பிரிட்டிஷ் பிரதமருக்கு அனுப்புமாறு சுநிலால் மேத்தா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மொத்தத்தில் பம்பாயில் நிலைமை மோசமடைந்து கொண்டு வந்தது. மறுநாள் வெள்ளிக்கிழமை நம்பிக்கைக் கதிர்கள் தோன்ற ஆரம்பித்தன. டாக்டர் அம்பேத்காரோடு அவரது தென்னிந்திய, வங்காள நண்பர்களும் வந்து சேர்ந்திருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த 71 இடங்களுக்குப் பதிலாக அம்பேத்கார் 197 இடங்களைக் கேட்டார். இடங்களின் எண்ணிக்கையை பாஹ்லேயுடனும் தக்கர் பாபாவுடனும் பேசி முடிவு செய்து கொள்வது என்று முடிவாயிற்று. மத்திய அசெம்பிளியில் தாழ்த்தப்பட்டோருக்கு 18% இட ஒதுக்கீடு பெற்றுக் கொள்ளப்பட்டது. பிற்பகல் மணி 4 ஆகிவிட்டது. ஆனால் பேச்சு வார்த்தை சிறிதளவே முன்னேற்றம் கண்டு இருந்தது. டாக்டர் அம்பேத்காரும் அவருடைய நண்பர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் நின்று போராடினார்கள்.(The redoubtable Doctor, supported by his colleagues fought every inch of ground) இதற்கிடையில் காந்தியடிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்து_தேசியம்.pdf/127&oldid=1669816" இலிருந்து மீள்விக்கப்பட்டது