உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொ பரமசிவன் நேர்காணல்கள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வந்துவிட்டன. அதற்குப் பிறகு பாடத்திட்டத்திலே வந்த மொழிமாற்றம் மிகக் குறைவு. சொல்லப்போனால் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 'களையெடுப்பு' என்பதைப் பற்றியே அதிகம் சிந்தித்தார்கள். பயிர்வளர்ப்பைப் பற்றிப் பேசவில்லை. களையெடுப்பு என்பது பயிர் வளர்ப்பின் ஓர் அம்சம்தானே தவிர, பயிர் வளர்ப்பதன் மற்ற அம்சங்களைப் பற்றி அவர்கள் யோசிக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் நோக்கம் அரசியல் அதிகாரம். இன்றைய சூழலுக்குரிய மொழிக்கல்வி எப்படி இருக்க வேண்டும். என்று நினைக்கிறீர்கள். சமூகச் சூழலோடு இணைந்த மொழிக்கல்வி நமக்குத் தேவை. சூழல் என்பதைக் கருப்பொருள், உரிப்பொருளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். சூழல் என்றாலே நாம் ஏற்றத்தாழ்வான சாதிய, வர்க்க சூழலைத்தான் நினைவுகொள்கிறோம். ஆனால் கரு உரிப்பொருள் சார்ந்த அனுபவங்கள் குறிப்பிட்ட சூழலுக் கான தன்மையை வழங்குகின்றனவே தவிர அதில் சாதி இல்லை.சங்கரன்கோயில் சார்ந்த எல்லாரும் தினைப்பயிரைப் பார்த்திருப்பார்கள். அது எப்படியிருக்கும் என்று திருநெல்வேலி ஆளுக்குத் தெரியாமல் இருக்கலாம். போத்திராஜா என்றால் இங்கு இருப்போர்க்குத் தெரியாது. ஆனால் இதைக் கேட்டவுடனே திருவண்ணாமலை மாவட்டக் குழந்தைகளுக்கு அந்தப் பெரிய வயிறும் அந்த உருவமும் நினைவுக்கு வருகிறதில்லையா ? இங்கே சுடலைமாடன் என்றால்தான் தெரியும். நிலவியல் அமைப்பும், உயிரும் பயிரும் இவற்றோடு தொடர்புடைய பண்பாடும்தான் சூழலை உருவாக்குகின்றன. இவற்றுடன் இணைக்கப்பட்ட மொழிக்கல்வி நமக்குத் தேவை. வட்டார ரீதியாக இதை உருவாக்கலாம்; அல்லது வட்டார வழக்குகளின் தன்மையுடன் கூடிய பொதுமொழியைக் கொண்டு இதைச் செய்யலாம். 'பிள்ளைத்தமிழ்' நூலில் இடம்பெற்றது சந்திப்பு: வ.கீதா, கோ. பழனி - நேர்காணல்கள் ✩ 159 2