உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை முதலிய 4 சிறுகதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளை, பகவான் கண்திறந்து பார்க்கட்டுமே, கஷ்டம் தீரட்டுமே." கலியாணத்துக்குத் தான் சம்மதித்தது, பெற்றோரின் வற்புறுத்தலால்தான் என்பதை மதுரை இதுபோலக் கூறினான். கொஞ்சம் உண்மை இருந்தது, அவன் கூறியதிலே. ஆனால், அவன் பிரம்மச்சரியத்தை விட்டுக் கிரஹஸ்தாஸ்ரமத்திலே பிரவேசிக்க விரும்பியதற்கு முழுக் காரணம், பெற்றோரின் பெருமூச்சு மட்டுமல்ல, பெரியநாயகியின் புன்சிரிப்புந்தான். அவன் அதை வெளியே சொல்லவில்லை! அவன்மட்டுதந்தானா? எந்த மதுரையும் அவனுடைய பெரியநாயகியின் புன்சிரிப்புக்குக் கட்டுப்படுவதை வெளியே சொல்லத் தான்மாட்டார்கள்!!

"மதுரை! உங்க வீட்டுத் தோட்டத்திலே மருக்கொழுந்து இருக்குதாமே! கொஞ்சம் கொடு"

"ஏன்! சாமி கோயிலுக்கா?"

"அம்மன் சன்னதிக்கு! சாமிக்கு இல்லை”

"எந்த அம்மன் சன்னதி?”

"அடே, போடா மக்கு! அதாண்டா, என் சம்சாரம் இல்லை, சௌபாக்கியம், அவளுக்குத்தான். கோயிலுக்கும் இல்லை, குளத்துக்கும் இல்லை"

"திருமலை! ஏது நீ சம்சாரம் கீறின கோட்டைத் தாண்டமாட்டேபோலிருக்கே. உங்க வீட்டுக்காரம்மா, எள் வேணும்னா நீ எண்ணெயே கொண்டுபோயிடுவே போலிருக்கே"

ஆமாம்! நாம்ம ராஜா சர்! வைரமாலையும், கை நிறைய வளையலுமா வாங்கித்தரப்போறோம்? என்னமோ பாடம், நம்மைக் கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நம்ப சக்தியானுசாரம் எதுவோ செய்யவேண்டியது தானே. நான் மட்டுந்தானா?

28