"குழந்தைகள்! மகா குழந்தைகள்! கோட்டான்கள் மாதிரி கூவி உயிரை வாங்குதுங்க"
"இந்தப் பாவி வயிற்றிலே வந்து பிறந்துதுங்களே, அதுகள் இப்படித்தான் சீரழியும். அப்பாப்பா! குழந்தைகளை அப்படி அலற அடிக்கக்கூடாது"
கிருஹஸ்தாஸ்ரமத்திலே, விசாரம் குடி புகுந்தது. குடும்பம் வளர்ந்தது! கூலி வளரவில்லை. கோபம் பெருகிற்று மதுரைக்கு. பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தைவிட்டு விலகியது தவறு என்று தோன்றிற்று. நாலு பிள்ளைகளுக்குத் தகப்பனான பிறகு, பழைய ஆஸ்ரமத்திலே பாசம் வைத்துப் பயன் என்ன?
வைசூரியின் பிரவேசத்தால், மதுரைக்கு மூன்றாம் ஆஸ்ரமம் சித்தியாயிற்று. பெரியநாயகி வைசூரிக்குப் பலியானாள். நாலு குழந்தைகள்! நாரும் நரம்புமாகப் பெற்றோர்கள். இந்நிலையிலே, முதலாளியிடம் சண்டை! வேலை போயிற்று! கிருஹஸ்தாஸ்ரமத்தின் முழு விஷயமும் அவனுடைய உள்ளத்திலே புகுந்தது. உருமாறினான். உள்ளமும் மாறிவிட்டது. வானப்பிரஸ்தம் புகுந்தான் — அதாவது திருமலையிடம், குழந்தைகளை அடைக்கலமாக்கினான்! பெற்றோர்களை ஈசனிடம் ஒப்படைத்தான். கங்காணி கனகசபையின் காலைக் கும்பிட்டுக் கூலி வேலை பெற்று, ரப்பர் காட்டுக்குப் போனான்! பர்மாவிலே, பாடுபட்டான்; குடும்பம் இல்லை, வானப்பிரஸ்தாஸ்ரமம்! அது ஓரளவுக்குத் திருப்தி தந்தது. வேலை செய்வான். கிடைப்பதை உண்பான்! கை, தலையணை, உறக்கத்துக்குப் பதில் ஏக்கம்! இந்நிலையிலே சில ஆண்டுகள் இருந்தான். வானப்பிரஸ்தம், குடும்பத்தை ஏற்று நடத்தவேண்டிய பொறுப்பிலிருந்து விலகிய நிலைமை, அதிகநாள் நீடிக்கவில்லை. மூத்த பையன் முடிச்சவிழ்த்-
32