சாகுந்தல நாடகம்
157
காமின்கள் - காப்பாற்றுங்கள். கானகம் - காடு. ஏற்ற தக்க.
அறிமுகம்
-
மரச்செறிவில் மறைந்துநிற்கும் அரசன், தனக்கு முன்பின் ல்லாத இளைய மகளிர்பாற் செல்லுதல் உயர்ந்தோரொழுக்கமாகாமையின், தான் அவர்கள்பாற் செல்லுதற்கு ஏற்றதொரு நேரத்தை எதிர்பார்த்துநிற்க, ஒரு வண்டானது அவர்களைத் துன்புறுத்தி, அவர்களே ஓர் ஆண்மகனுதவியை அவாவிக் கூவுமாறுசெய்து, அவன் அவர்களைச் சென்று குறுகுதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு காண்க. இங்ஙனந் தலைமகன் தலைமகளைச் சென்று சேர்தலை ‘வண்டோச்சி மருங்கணைதல்' என்று தமிழ் நூலார் கூறுப. துஷியந்தன் வேட்டமாடப் புகுந்ததிலிருந்து, அவன் தனக்கு ஏற்ற சகுந்தலையைச் சென்று சேருங்காறும், ஊழ்வினை அவனுக்குப் பல வாயில்களை ஒரு தொடர்பாக இசைவித்து வருதல் காண்க.
-
(பக் 15) ஒறுத்து - வருத்தி, தண்டித்து. செங்கோல் செவ்விய அல்லது நடுவுநிலை கோணாத கோல், அக் கோல் அரசனது முறையரசுக்கு அடையாளமாயிற்று. ஒச்சுதல் சலுத்துதல். ‘ஏடா’ தோழன் முன்னிலைப்பெயர்; இச் சொல் க் காலத்தில் ஒருவன் தன்னிற் கீழ்ப்பட்டான் ஒருவனையாதல், தன்னிற் குறைந்த சிறுபருவத்தான் ஒருவனையாதல் தன்முகப்படுத்துதற் கண் வழங்குகின்றது.
இக்
இடர் - துன்பம். குடில் - சிற்றில். வழிபாடு - வணக்கம் உரை - சொல்.
-
(பக். 16) அடர்ந்த நெருங்கிய. 'ஏழிலைப்பாலை': மகளிரான் மலரும் ஒருவகை மரம். எக்கர்மணல் கடல் அல்லது யாற்று நீரால் ஒதுக்கி உயர்த்தப்பட்ட மேட்டு மணல். அமர்ந்து இருந்து.
-
டு
-
வேலை - தொழில் ஆண்டு வயது நட்பு -நேசம். பணிவு தாழ்வு. இசைவு பொருத்தம். மாட்சி - பெருந்தன்மை. ஆவல் பெருவிருப்பு. மொழிந்த சொல்லிய. விழைவு - பெருகிய
அவா.
-
-