சகுந்தலையை
சாகுந்தல நாடகம்
191
அழைத்துக் காண்டு கானகத்தூடே செல்கின்றனர். சகுந்தலையை விட்டுப் பிரியுங்கால் அவள் தோழியருங் காசியபரும் அடையும் ஆற்றாமையினைக் காளிதாசர் புலப்படுத்திக் காட்டும் முறை இதனைப் பயில்வா ருள்ளத்தை நீராய் உருகச் செய்தல் காண்க. இந் நான்காம் வகுப்பின்கண் இந் நாடகக் கதை நிகழ்ச்சி இத் துணையின் முடிகின்றது.
-
-
உவளகம் அந்தப்புரம். அறத்தின் முறை தருமத்தின்
ஒழுங்கு.
(பக் - 61) வழிபாடு - பூஜை. 'காவற்றெய்வம்' என்பது மணங் கூடினார்க்கு நலம் பயப்பது, இது கௌரி அல்லது பார்வதியேயாகும். இதனைக் தனைக் காளிதாசர் சௌபாக்ய தேவதா’ என்கின்றனர். ஒம்பாது உபசரியாது.
(பக். 62) சீற்றம்
-
-
மிகுசினம்.
துருவாசர்’ என்பவர்
அத்திரிக்கும் அனசூயைக்கும் புதல்வராவர்; இம் முனிவர் எளிதிற் சீற்றங் கொள்பவர் என்றுங் கொடுஞ்சாபம் இடுவதில் முன் நிற்பவரென்றும் புராணங்கள் கூறுகின்றன. ஒண்ணாத - கூடாத, ‘ஒன்றாத' என்னுஞ் சொல் திரிந்தது.
வழுவி - தவறி. மன்றாடி - இரந்து கேட்டு.
-
(பக். 63) பிழையாது தவறாது. அணிகலம் - நகைவரவு சாபம்,'சாபம்' சாபம், 'சாபம்' வடசொல்.
பொறிக்கப் பெற்ற - பதிக்கப் பெற்ற. கணையாழி திரட்டிச் செய்த மோதிரம், கணை - திரட்சி, வசை - தீயசொல், சாபம் - ஓவியம் - சித்திரம்.
ச் சாகுந்தல நாடகக் கதை மாபாரதத்தினின்றும் எடுக்கப்பட்ட தொன்றாகும். சகுந்தலையைத் துருவாசர் வைததாகச் சொல்லுங் கதை மாபாரதத்தின்கட் காணப்பட வில்லை. மேல் நடைபெற வேண்டிய நாடக நிகழ்ச்சிக்கு ஒரு காரணங் காட்டல் வேண்டியே காளிதாசர் தாமாகவே இதனைப் படைத்து இங்குச் சேர்த்தார். மேலுந், துருவாசர்
.