சாகுந்தல நாடகம்
111
னி அஃது என்றுந் திரும்பா வகையாய் மறைந்து விட்டதே! மனத்திற்கொண்ட ஆவல் தலைகீழாக விழுந்தொழி கின்றதே!
விதூஷகன் : அப்படிச் சொல்லாதீர். ஏன், முன் நினை யாத ஒரு சேர்க்கையானது, கட்டாயம் நடக்க வேண்டி யிருந்தால் நடந்தே விடுகின்றதென்பதற்கு இந்தக் கணை வி யாழியே ஒரு சான்றாக இருக்கின்றது.
அரசன் : (கணையாழியைப் பார்த்து) ஓ! எளிதிலே கிடைத்தற்கில்லாத இடத்தினின்றும் விழுந்து விட்டமையால் துயருறத் தக்கதான அக் கடைகெட்ட பொருள் இதோ ருக்கின்றது. ஆ ஆழியே!
கெண்டையங் கண்ணினாள் கிளிநக விரலிடங் கொண்டுநீ சிறிதுநாள் கூடிப் பின்னதை
விண்டமை தெரிந்திடில் வினைவளஞ் சிறிதுறப்
பெண்டிரைப் பிரிந்தவென் பெற்றி ஒத்தியால்.
சானுமதி : வேறொர் அயலான் கையில் அகப்பட்டிருந் தால், இஃது உண்மையிலேயே மிகவும் இரங்கத் தக்கதாகத் தான் இருக்கும்.
கையிலிடப்பட்டது
விதூஷகன் : நண்பரே! உமது பெயர் பொறிக்கப் பட்ட இம்மோதிரம் அவ்வம்மை நிகழ்ச்சியினால்?
எந்த
சானுமதி : தெரிந்து கொள்ளுதற்கு எனக்கு உண்டான ஆவலினாலேயே இவனுந் தூண்டப்படுகின்றான்.
அரசன்
சொல்லுகின்றேன் கேள். யான்
எனது
நகரத்திற்குப் புறப்படும்பொழுது, என்காதலி கண்களில் நீர் ததும்ப நின்று “பெருமான்! எத்தனைநாட் சென்றபின் எனக்குச் செய்தி விடுப்பீர்,” என்று கேட்டாள்.
விதூஷகன் : அதன் பிறகு?