158
மறைமலையம் -6
துஷியந்த மன்னன் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அனசூயை கேட்ட வினாக்களுக்கு அவ் வரசன் உண்மையைத் தெரிவியாமல், தன்னை மறைத்து மொழியும் நுட்பம் உற்றுநோக்கற்பாலது. ஒருவனுடைய வரலாறுகள் தெரியாமலே அவனைக் கண்ட அளவில் அவன்மேல் ஆராக்காதல் கொள்ளும் ஒரு மங்கையே அவன்மேல் என்றும் நெகிழாத அன்புடையளாய்க் கற்பொழுக்கத்திற் சிறந்து திகழ்வள். ஒருவன்றன் செல்வத்தையும் அதிகாரத்தையுந் (தலைமையையும்) புகழையுங் குடியுயர்வையும் பாராட்டி அவன்மேல் அன்பு கொள்ளும் ஒரு மாது அவன்பால் என்றும் பிறழாத காதலன்புடையளாய் ஒழுகுதல் அரிது. அது பற்றியே, அரசன் தனக்குள்ள புறச்சிறப்புகளைத் தெரிவியாது, தன்மேற் சகுந்தலையின் மனப்பதிவு எத்தன்மையதாக நிகழ்கின்றதென ஆராய்ந்து ஓர்கின்றான். என்றாலுந் தன் குடிக்கு முதல்வனான ‘புரு’வின் பெயரால் தன் உண்மையையும் ஒருவாற்றாற் குறிக்கின்றான்.
-
—
(பக். 17) நடைபெறுதல் பறுதல் - நடத்தல். வேந்தன் அரசன். ஏற்படுத்தல் - நிருமித்தல். இழைக்கும் - செய்யும். நிகழ்தல் நடத்தல்: நிறைவேறுதல். அறத்தின் உரு - தருமத்தின் வடிவம். செய்வோர். காவலர் கானகம் - காடு. இயற்றுவோர்
-
காவலாய் இருப்போர். களஞ்சியம் சகுந்தலை என்பது குறிப்பு.
-
-
பொக்கிஷம், இங்கே
(பக். 18) ஏடமார் - தோழிமார். உள்ளம் - மனம். செவி
—
கொடுத்தல் கேட்டல்.
-
சைந்தால்
வினாவுதல் கேட்டல். தலையளி
முதன்மையான அருள்.
-
-
ணங்கினால். சிறந்த அல்லது
'பிரமசரியம்' என்பது மணஞ்செய்யாது கல்வியிலுந் தவத்திலுந் தன் அறிவையும் முயற்சியையும் ஈடுபடுத்தி நிற்கும் நிலை. கண்ணுவமுனிவர் பிரமசரிய நிலையில் இன்றிக் கிருகத்தராய் இருப்பவரேனுஞ்
(இல்லறத்தவராய்)
சகுந்தலையின் பிறப்பைத் தெரியும் பொருட்டு மன்னன் அவரை அந் நிலையிலுள்ளவராகக் கருதி வினாவினான்.