குழந்தைச் செல்வம்/மகாத்மா காந்தியடிகள்
Appearance
53. மகாத்மா காந்தியடிகள்
வெண்பா
சத்தியத்தால் மன் அரிச் சந்திரனைத் தண்ணருளால்
புத்தபெரு மானையொத்த புண்ணியனை - உத்தமனாம்
அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு
சிந்தனைசெய் நெஞ்சே தினம்.
1
வேறு
மெய்யே நெஞ்சில் நாடிடுவார்.
விஞ்சும் பொறுமை போற்றிடுவார்.
வையம் மகிழ அருள் நெறியில்
வாழ்வு கண்டு வாழ்ந்திடுவார்,
தெய்வம் தொழுவார், நடுநீதி
திறம்பா தென்றும் காத்திடுவார்
ஐயமின்றிக் காந்தி மகான்
அன்ப ராவார் அறிவீரே.
2