உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/திருவடி தொழுகின்றோம்

விக்கிமூலம் இலிருந்து

58. திருவடி தொழுகின்றோம்

                   பல்லவி

திருவடி தொழுகின்றோம் - அன்பொடு
திருவடி தொழுகின்றோம். (திருவடி)

                  அநுபல்லவி

குருவடி வாகநின்று
     குறையெலாம் போக்கி நலம்
அருள்செய வேண்டும் எங்கள்
     ஆண்டவனே ! உன்றன் (திருவடி)

                   சரணம்

தருமம் தழைத்திடவே
     சத்தியம் ஓங்கிடவே
பருவமழை பொழிந்து
     பயிர்கள் செழித்திடவே,
திருவளர் கலை யெல்லாம்
     தினமும் வளர்ந்திடவே
அருள்வழி போற்றி மக்கள்
    அனைவரும் வாழ்ந்திடவே (திருவடி)

புத்தி சிறந்திடவே
    புலமை நிரம்பிடவே
சத்தி பெருகிடவே
    சற்குணம் வாய்ந்திடவே,
உத்தம ராகி நாங்கள்
    உலகில் உழைத்திடவே
நித்தமிக் கல்விச்சாலை
    நிலைத்து விளங்கிடவே (திருவடி)