உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


ஸ்ரீ:

சாந்தியின் சிகரம்
1

“உலகத்தில் மக்கள் எப்போதும் இன்பத்தையே கோருவார்கள். இம்மைக்கும், மறுமைக்கும் சேர்ந்த இனிய வாழ்க்கையைத்தானே மக்கள் பகவானிடம் பக்தி செய்து சதா வேண்டுவார்கள். அதே போலத்தானே, நானும் விரும்புகிறேன். ஸ்ரீதரா! என் வார்த்தையைக் கேள். இனியும் தட்டாதே. பெற்ற தாயின் உள்ளத்தை மகிழ்விப்பதே மக்களின் கடமையாகும். அதை நீங்கள் செய்து முடித்த பிறகுதான், என் மனம் சாந்தியடையும். ஏதோ உளறுகிறாள் என்று நீ நினைக்கிறாயேயன்றி, பெற்ற மனத்தின் பதைபதைப்பை நீ உணரவில்லையே ஸ்ரீதர்! இதோ இந்தப் புகைப்படத்தைப் பார்!” என்று கமலவேணியம்மாள் தன் மகனிடம் மிக்க அன்புடன் கேட்டாள்.

இதைக் கேட்ட ஸ்ரீதரன் “அம்மா! உன் விருப்பத்திற்கு மாறாக நான் எப்போதாவது நடக்கிறேனா? நீ விரும்பிய படியே, சகல விதத்திலும் நடந்து கொண்டு டாக்டராகவும் ஆகி, உன் மனத்தைக் களிப்பிக்கவில்லையா! இந்த ஒரு விஷயத்திற்கு மட்டும் நீ என் விருப்பப்படி விட்டுத்தான் கொடுக்க வேண்டும். இப்போது விவாகத்திற்குச் சம்மதிக்கவே மாட்டேன் நான். என்னுடைய இதயக் கடலில் கொந்தளிக்கும் லக்ஷ்ய அலைகளும், எண்ணற்ற ஆவலும் நீ அறிய மாட்டாயம்மா! என்னுடைய லக்ஷ்யம் ஈடேறுவதற்கு நீ விரும்புகிற கல்யாணம் தடை செய்து என்னை ஏமாற்றிவிடுமேயன்றி, வெற்றியளிக்காது. இதுதான் எனது நம்பிக்கை…”

தாயார் (இடைமறித்து)… “என்… என்ன! கல்யாணம் செய்து கொண்டால், உன் லக்ஷ்யம் தடைபடுமா? ஸ்ரீதர்! நான் இம்மாதிரியான ஒரு வார்த்தையை, உலகத்தில் கண்டதே இல்லையே! கேட்டதுமில்லையே! அப்பா, குழந்தாய்! கல்யாணமில்லாத ஒண்டிக்கட்டை வாழ்வு

சா—1