உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

6

உயிருக்கு பயமே இல்லை. இப்போதே சரியாகி விடும். அதைரியப்படாதீர்கள். நோயாளியின் எதிரிலா இம்மாதிரி பேசுவது. தைரியலக்ஷ்மியின் துணையுடன், சாந்தமாயிருங்கள்" என்று கூறி விட்டுத் தகுந்த சிகிச்சை செய்தான்.

கடவுளின் கருணையும், பெரியார்களின் ஆசீர்வாதமும் நிறைந்திருக்கும் நல்ல சமயம் வாய்த்து விட்டால், அரை க்ஷணத்தில் சகலமான நன்மைகளும் உண்டாகி விடுமல்லவா? அம்முறையில் டாக்டர் ஸ்ரீதரனை அதிர்ஷ்ட தேவதை பரிபூர்ணமாய் ஸ்வீகரித்திருப்பதால், உயர்ந்த மருந்தை ஊசி குத்திய அடுத்த நிமிஷமே படுத்திருக்கும் பெண் நன்றாகக் கண்களை, சுயமான அழகுடன் திறந்து நாற்புறமும் நினைவுடன் பார்த்தாள். இதைக் கண்ட பெற்ற தாயின் வயிற்றில் அமுதத்தை அள்ளி வார்த்தது போன்ற ஒரு தனித்த சந்தோஷமும், வாத்ஸல்யமும் ஊற்று போல் சுரந்தது.

டாக்டரை அவள் உள்ளம் நேருக்கு நேராக வந்துள்ள தெய்வம் என்று மதித்துப் போற்றியதேயன்றி, மனிதனாக நினைக்கவில்லை. “டாக்டர்! நீங்கள்தான் தெய்வம்!… நீங்கள் கலியுக தெய்வம் என்றால் மிகையாகாது! என் வயிற்றில்பாலைக் கறந்த பரம தயாளன் நீங்கள்தான்…” என்று அந்தம்மாள் தோத்திர மலர்களை உதிர்க்கும் போது, டாக்டருக்கு இரண்டு விதமான உணர்ச்சிகள் உண்டாயின. பெற்ற தாயாரின் அன்புத் துடிப்பின் உணர்ச்சி எத்தனை தூரம் எழும்பி உச்சத்தை எட்டியிருக்கிறது?… தாய் உள்ளத்தின் சக்தியே தனித்ததொன்றல்லவா? அதனால்தான், முற்றுந் துறந்த முனிவராயினும், பட்டினத்து அடிகள் தாயாரின் பால் மீளாத அன்பு கொண்டு, அவளுடைய அந்திம கரியைகளைத் தாமே செய்ய முன் வந்தார். மகான்களறியாததா! மற்றொன்று: பெற்ற தாயை முதலில் அலக்ஷியம் செய்த ஹரிதாஸர், அந்த விலையிலா மதிப்பை உணர்ந்து அன்னையும் பிதாவும்