உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

12

பிசாசல்லவா! ஒரு நிமிஷம் வருவதற்கு 50 ரூபாயா?…” என்றார்.

மனை:- சரிதான்! குழந்தை இருந்த இருப்பைப் பார்த்தால், நீங்கள் என்ன செய்திருப்பீர்களோ! உயிரே நின்று விட்ட மாதிரியல்லவா ஆய் விட்டது. எலக்ஷன் செலவில் இதுவும் ஒன்று என்று வைத்துக் கொண்டு பணத்தைக் கொடுத்தனுப்புங்கள்—என்று கூறியபடி 50 ரூபாயை எடுத்துக் கொடுக்கும் போது, கையில் தேள் கொட்டுவது போலவே தோன்றியது!

“குழந்தைக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றினீர்கள். மாலையில் எப்படி இருக்கிறது என்பதை போனில் சொல்லுகிறேன்…” என்று இழுப்பதற்குள், டாக்டர் சிரித்துக் கொண்டே, “சரிதான் ஸார்! தாங்கள் தெரிவித்த பிறகே வருகிறேன்” என்று கூறி விட்டு, பணத்தை ஜேபியில் போட்டுக் கொண்டு கம்பீரமாய்ச் சென்றான். “ஏண்டீ! ஸமயா ஸமயம் அறியாமல், டாக்டர்களைக் கூப்பிடலாமா? இந்த டாக்டர்தான் கொள்ளையடிக்கும் வள்ளலாயிற்றே! இவனையா கூப்பிடுவது? இந்த 50 ரூபாயிருந்தால், ஆளுக்கு 5 ரூபாய் வீதம் பத்து ஓட்டுக்கள் எனக்கு வந்திருக்குமா? அனாவச்யமான செலவை இப்போதா வைப்பது?” என்று மனைவியைக் கடிந்து கொண்டார்.

மனைவி:- நான் மட்டும் சும்மாக் கூப்பிடவில்லை. உங்கள் சகோதரியார், இந்த டாக்டருக்கு நமது மகளைக் கொடுக்கலாம் என்றும், அவர்களைப் பற்றி வானளாவிப் புகழ்ந்தும் பேசினார்கள். அதோடு, அவர்களுடைய வீட்டிற்கும் சென்று விசாரித்துக் கொண்டு வந்தார்களாம். அந்த நன்மையை உத்தேசித்து, இந்த ஆபத்தான சமயத்தில் அவரைக் கூப்பிட்டேன்… அடேயப்பா! டாக்டராக வந்திருக்கையிலேயே கொள்ளையடிக்கும் பேர்வழி, மருமகப் பிள்ளையாய் வந்து விட்டால், நம்மைக் கசக்கிச் சாறுதான் பிழிந்து விடுவான் போலிருக்கிறது! போதும்!… இந்த சம்மந்தம்