உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை. மு. கோ. 103-வது நாவல்

14

கிருஷ்ணவேணி:- கமலம்! நானும், நீயும் இன்றய சினேகிதிகளா? ஆதிமுதல் பழக்கப்பட்டவர்களல்லவா? தன் கண்ணாலேயே பார்த்த பிறகுதான், என் கணவர் என்னிடம் சொன்னார்… ஐயோ பாவம்! உன் சினேகிதி, கமலவேணி, தன் மகனைப் பற்றி ப்ரமாதமாய் எண்ணி ஏமாறுகிறாளே! அவன் கல்யாணம் வேண்டாம் என்றதற்குச் சரியான காரணமும் கூறாமல், ஏதோ சாந்தியாம், சிகரமாம் எதையோ கூறி அந்தம்மாளை அவன் ஏமாற்றி விடுகிறான். அவன் ப்ரதி தினமும் இரவு 8 மணிக்கு, செங்குன்றத்திற்குச் சமீபத்திலுள்ள ஒரு பெரிய பங்களாவுக்குச் செல்கிறான். இரவு 10, 12 மணிக்கு மேல் வெளியில் வருகிறான். இந்த அதிக ப்ரஸங்கித்தனமும், ஊழலும் இருப்பதனால்தான், அவன் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, கல்யாணம் வேண்டாம் என்று, தான் மகா உத்தமன் போல் ஸாதிக்கிறான். எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது; இதை உடனே உன் சினேகிதை இடம் சொல்லு… என்று என் கணவர் வற்புறுத்திச் சொல்லியதால், நான் வந்தேன். நீ என்னமோ, அவன் சொல்வதை நம்பித்தானிருக்கிறாய்... விஷயமோ விபரீதமாயிருக்கிறது!

கமல:- எனக்கு உண்மையில் நம்பிக்கையே கொள்ளவில்லையே… என் ஸ்ரீதரனா இப்படி துன்மார்க்க விஷயத்தில் இறங்குவான்?… அந்த இடத்தில் யாரிருக்கிறார்கள்? நல்ல குல ஸ்த்ரீயாக இருந்தால், நாமே பார்த்து, அவன் இஷ்டப்படியே விவாகத்தை முடித்து விடலாமே. அவன் மனதும் சந்தோஷமாகும், என் குறையும் தீரும்…

கிருஷ்:- ஐயோ பைத்தியக்காரி! அந்த வீட்டில் யாரோ தேவதாசி புதிதாகக் குடி வந்திருக்கிறாளாம்; அவளுக்கு நான்கு பெண்கள் இருக்கிறார்களாம். அந்த தாசி மிகவும் படித்தவளாம்: கச்சேரிகாரியாம். ஒரு பெண்ணை பரதநாட்டியக் கலையிலும், ஒரு பெண்ணை ஹரிகதா காலக்ஷேபக் கலையிலும், ஒரு பெண்ணை உயர்தர உபாத்தியாயினியாக-