53
சாந்தியின் சிகரம்
லவா? அவனுக்கு ஆழ்ந்த யோசனையுமில்லை. குடும்பத்தின் கண்ணியத்தில் அக்கறையுமில்லை. இதைக் கொண்டு, அவன் சினேகிதர்களுக்குக் காட்டினால், அதனால் எத்தனை தூரம் பாதகமுண்டாகும்? இதைப் பற்றி நன்றாக யோசித்துத்தான் அவனிடம் கெஞ்சி, மன்றாடிக் கேட்டுப் பார்த்தேன். தன்னிடம் இல்லை, இது விவரமே தனக்குத் தெரியாது என்று ஒரே சாதனையாக ஸாதித்து விட்டான். உங்களுக்குள் இந்த பிரிவினை இருப்பதை உன் சகோதரிகளறிந்தால், “எங்களுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையா?'” என்று உன் மீது மனஸ்தாபப்படுவதோடு, சகல சொத்திற்கும் அவனே அதிகாரியாகி விட்டதால், வீணான மனஸ்தாபம் உண்டாகும். உன் தம்பி ஸ்திர புத்தியில்லாதவன்; அவனை ஏமாற்றி, அவனுடைய சகாக்கள் பணத்தின் மீதுள்ள மோகத்தால், உயிருக்கே உலை வைத்து விடுவார்கள். குடும்பம் ஆடிக் கலகலத்து விடுவதால், பிறர் கண்டு சிரிப்பதற்கல்லவா இடம் உண்டாகி விடும். ஏற்கெனவே உன் பிதாவின் செய்கை, தலை குனியச் செய்தது இன்னும் தீரவில்லை…
ஸ்ரீதர்:- அம்மா! நீ ஏதேதோ கற்பனைகளால், இந்த விஷயத்தை மகா விபரீதமாய் எண்ணிச் செய்து விட்டாய். திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியினால், இதயமே சிலருக்கு நின்று விடுமே. நீ இக்காரியத்தை, அவன் இல்லாத சமயத்தில் செய்திருக்கக் கூடாதா?… அப்படிச் செய்வதற்குச் சாவி இல்லை… பிறர் பார்த்து விடுவார்கள்… என்று சொல்வாய் ! நான் இக்கடிதத்தைப் பற்றி கவலையே படவில்லை. அவசரமான கேஸ் வந்து விட்டதால், நான் போய் விட்டேன். இதற்குள், எத்தனை தடபுடல்கள் உண்டாகி விட்டன… அம்மா! போனது போகட்டும்; நடந்தது நடந்து விட்டது. இதைப் பற்றிப் பேசி ப்ரயோஜனமில்லை. பேயோ! பிசாசோ என்ற பயத்தின் அதிர்ச்சி, தம்பியின் இதயத்தை மிகவும் ஆட்டி, பாதித்திருக்கிறது. நாம் இதை அப்படியே விட்டால், அவனுக்கு இதய பலவீனம் உண்-