உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

60

யத்தை கவனியாமல், தானாகக் கனியாத பழத்தைத் தடி கொண்டடித்துக் கனியச் செய்வது போல், அனாவச்யமாய் என் விஷயத்தில் குழம்பாதேம்மா! தம்பியை முதலில் கவனிப்பதுதான் இப்போது கடமை. என்னிதயத்தில் சிற்றின்பத்தின் திவலை கூட படியவில்லை. மாசுமருவற்று, அப்பழுக்கற்ற தூய பரிசுத்த நிலையில், த்யாகப் பிழம்பாயிருக்கிறதை, ஒரு போதும் குட்டிச் சுவரடிக்க விட மாட்டேன். இந்த வீண் ப்ரமை எதற்கு.. அம்மா! நீ கொடுத்த வாக்குதத்தத்தை மறந்து விட்டாயா!…

சரி! சரி! மணி 4 அடிக்கப் போகிறது. தம்பியைச் சரிப்படுத்தும் பொறுப்பு இனி என்னைச் சேர்ந்தது. நீ வீணாகக் கவலைப்படாதே. படுத்துக் கொள்ளு. இக்கடிதத்தை இப்படிக் கொடு…

என்பதற்குள், கமலவேணி ஆத்திரத்துடன் அதைச் சுக்கலாகக் கிழித்தெறிந்து விட்டு, இக்கடிதத்தினாலல்லவா இத்தனை கலவரங்கள் வந்தது! என்று விம்மினாள். அதோடு தாமோதரன் பெட்டியிலிருந்து கொண்டு வந்த மற்ற கடிதங்களையும் ஸ்ரீதரனுக்குக் காட்டி… “தம்பீ! இதைப் பாரு…” என்றாள்.

ஸ்ரீதர:- அம்மா! நீ செய்யும் அசட்டுத் தனத்தினால்தான், அவன் வழி இல்லா வழியில் ப்ரவேசிக்கிறான். அதோடு பெத்த பிதாவின் இழிவான குணத்தின், களங்கம் இவனுடைய ரத்தத்திலும் இருப்பதால், ஆசாபாசத்திற்கு அடிமையாகிறான். இதையறிந்தும், நீ இம்மாதிரி இருப்பது சற்றும் பொருந்தாது. நீ நினைக்கிறபடி, ஒற்றுமையும், குடும்பத்து கண்யமும் ஒருபோதும் நிலைத்து நிற்காது. இனி வீண் வார்த்தைகளுக்கு இடங் கொடுக்காதே. இந்த காதல் கடிதங்களை அவனிடமிருந்து நீ எடுத்ததே தப்பிதம். இந்தப் பெண் யார், என்ன என்பதை விசாரித்து நான் இதையே முடித்து விடுகிறேன். பயப்படாதே என்று வெகு சட்ட திட்டமாகப் பேசித் தாயாரைச் சமா-