உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

சாந்தியின் சிகரம்

தானப்படுத்திப் பின் கடிதங்களைத் தான் பெற்றுக் கொண்டு சென்றான். கமலவேணியம்மாளுக்கு என்ன செய்வது என்பதே தோன்றாமல், இடிந்துப் போய் கல்லாய்ச் சமைந்து விட்டாள். அவளுடைய வருத்தம் கரை கடந்து சென்றது. நாம் ஒன்று நினைத்துச் செய்தது, கடவுள் ஒன்றாக நினைத்து விட்டாரே! என்ற வியப்பும், கலக்கமுமே குடி கொண்டு வாட்டியது.

9

ன் விடுதிக்குச் சென்ற ஸ்ரீதரனுக்கு மனம் நிம்மதியே அடையவில்லை; ஏற்கெனவே, தன் தொழிலின் மூலம் உண்டாகிய அலுப்புடன், இந்த தொந்தரவுகளும் சேர்ந்து தலையில் பெரிய பாரமாகத் தோன்றியதால், இருக்கை கொள்ளாமல் தவித்தான். உயிருக்கே மன்றாடிக் கொண்டுள்ள சில பேஷண்டுகளை நினைக்க பயம் வேறு நடுங்கியது.

நேரே சென்று, குளிர்ந்த ஜலத்தில் நன்றாக ஸ்நானம் செய்தான். காலை நேரத்தில் செய்ய வேண்டிய பூஜையைச் செய்யாமல், அவன் தொழிலுக்குப் புறப்படுவதே இல்லை. அதையொரு வ்ருதமாகக் கொண்டிருப்பவனாதலால், தவறாது நடத்தி வருவது போல், அன்றும் பூஜையை முடித்துக் கொண்டு, நேரே தன் தம்பியின் விடுதிக்குச் சென்றான்.

அப்போதுதான் கண் விழித்தவாறு, இரவு நடந்த விஷயத்தை எண்ணி, எண்ணி ஒன்றும் விளங்காத குழப்பத்துடன் படுத்திருந்தான். அதோடு இரவு உண்டாகிய அதிர்ச்சியினால், சிறிது ஜுரமும், தலைவலியும் உண்டாகியிருந்ததால், சோர்ந்து காணப்பட்டான். ஸ்ரீதரன் சிரித்தபடியே உள்ளே சென்று, “தம்பீ! சிறிது நேரமாவது நன்றாகத் தூங்கினாய் என்று தெரிந்தது. ஏனெனில் நான் இரண்டு, மூன்று தரம் வந்து பார்த்தேன். அயர்ந்து