உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாந்தியின் சிகரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.மு.கோ. 103-வது நாவல்

92

பில் பிறந்து விட்டாலும், என் தாயின் சீல குணத்திற்கும், மாசு, மருவற்ற தூய வாழ்க்கைக்கும் கட்டுப்பட்டவள். என்னுடைய வாழ்க்கை ரகஸியம், நாம் ஒரே பிதாவின் மக்கள் என்ற பரம ரகஸியம் இந்த நிமிஷம் வரையில் எனக்குத் தெரியாதிருந்தது; இப்போதுதான் என் தாயாருக்கும் தெரிந்தது. இனி நம்முடைய வாழ்க்கைச் சக்கரங்களின் பாதையே வேறு விதமாக மாறி விட்டது. இனி பழயபடியான நேசத்தில் என்னை நினைக்காமல், உங்களுடைய இரண்டு சகோதரிகளைப் போல், மூன்றாவது சகோதரியாய் என்னையும் எண்ணுங்கள் என்று கேட்பதற்காகவே கூப்பிட்டேன். பெரிய அண்ணாவுக்கு என் நமஸ்காரம் கூறுங்கள்.. குட்பை…

தாமோ:- ஹல்லோ… ஹல்லோ… உஷா!… உஷா சடக்கென்று வைத்து விட்டாளே… என்று வருத்தத்துடன், அப்படியே நாற்காலியில் சாய்ந்தான். அவன் இதயத்திலடிக்கும் புசல் காற்றிற்கு, எல்லை வைத்துக் கூற முடியாது போய் விட்டது.

14

டாக்டர் தொழில் செய்பவர்களுக்குள்ள தொல்லை சொல்லி முடியாது. அதிலும், குடும்பத்திலும் பல பல சோதனைகள் உண்டாகுமானால், அவர்களுடைய மனத்தின் தவிப்புக்கு எதைத்தான் உபமானமாகக் கூற முடியும்? டாக்டர் ஸ்ரீதரனுக்கு ஏற்கெனவே உள்ள குழப்பங்களுடன், இந்தப் புதிய தாக்குதலின் வேகம், உண்மையில் பலமான கவலையையே உண்டாக்கி விட்டது. இந்த அல்ப ஆசையை, மிக ப்ரமாதமாக எண்ணியுள்ள தம்பியின் நிலைமை இந்த ஏமாற்றத்தினால், என்ன ஆய் விடுமோ! எப்படி எல்லாம் மாறி விடுமோ! தாயாரின் கதி எந்த விதம் முடியுமோ என்ற ஏக்கமும், கவலையும் சேர்ந்து பாதிக்கும் குழப்பத்துடன் டெலிபோனில் தெரிவித்த விலாஸத்திற்கு வந்து சேர்ந்தான்.