உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து

அடுத்து வி. அ.

...

621).

வி.அ. 1.மேன்மேல், பலகாலும். அடுத்துத் தன் பொய்யுண்டார்ப் புணர்ந்த நின் எருத்தின் கண் தொடி (கலித். 71, 15). அதனை அடுத் இல் தூர்வது அஃதொப்பது 2.நெருங்கி. மரம்செடிகொடிகள் அடுத்து வளர்கின் றன (நாட். வ.). 3. மறுநிகழ்ச்சியாக. அடுத்து மன் றத்தலைவர் பேசினார் (செய்தி. வ.).

அடுத்துக்கழுத்தறு-த்தல்

11 வி.

(குறள்.

1.சதி

செய்து

கொல்லுதல். (வட்.வ.) 2.நண்பன்போல் பலநாள் பழகிக் கேடு செய்தல். அவன் தன் நண்பனை அடுத் துக் கழுத்தறுத்தான் (பே. வ.).

நட்புப்போற்

சேர்ந்து

கெடுக்கக்

கேடு செய்தல். யாரையும் யாரையும் அடுத்துக்

அடுத்துக்கெடு-த்தல் 11 வி.

கூடாது (முன்.).

அடுத்துமுயல் - தல்

3வி. இடைவிடாது முயலுதல். அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா (மூதுரை 5).

அடுத்துவரலுவமை பெ. (அணி.) உவமைக்கு உவமை. துப்பை ஒக்கும் தொண்டைபோலும் செவ்வா யென இரண்டுவமையும் செவ்வாயை நோக்கு தலின் அடுத்து வரலுவமை யன்று (சீவக. 107 நச்.).

அடுத்து விளக்கு-தல்

5 வி. உலோகப்பற்று வைத்து ஒட்டுதல். அடுத்து விளக்கின மொட்டும் பறளை யும் (தெ.இ.க. 2,96).

அடுத்தூண் பெ. வாழ்விற்கு விடப்பட்ட நிலம். வாய்க் கரைப் பற்றை அடுத்தூணாக உடையவன்

வாய். 4, 8, 8 ஈடு).

.

(திரு

அடுத்தேறு பெ. மிகை. அடுத்தேறாக வந்த கரத் தைக் கழித்து (முன். 3, 8, 9 ஈடு).

.

அடுநறா பெ. காய்ச்சிய கள். அடுநறா மகிழ் தட்ப (பரிபா. 21, 20).

அடுப்பங்கரை (அடுப்பாங்கரை) பெ. 1. அடுப்பின் பக்கம். (நாட். வ.) 2. சமையலறை. (முன்.)

அடுப்படி

பெ. சமையலறையில் அடுப்பு வைத்துச் சமைக்குமிடம். அவள் அடுப்படியில் இருக்கிறாள் (நாட். வ.).

அடுப்பம்1 பெ. கனம். மேக அடுப்பமும் பார் அடுப் பேய்க் கணங்கட்கு (தக்க. 361

பமும் ஒத்தன

ப. உரை).

146

அடுப்பூதி

அடுப்பம்2 பெ. நெருங்கிய உறவு. (செ.ப. அக. அனு.)

அடுப்பாங்கரை

(அடுப்பங்கரை)

பெ. அடுப்பின்

பக்கம். (நாட். வ.)

அடுப்பு1 பெ. 1. தீ மூட்டிச் சமையல் செய்வதற்கான இடம். முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி (பெரும்பாண்.99). இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க (ஆசாரக். 46). பாலைக் கறந்து அடுப் பேற வைத்து (பெரியாழ். தி.2,9, 5). நறும்புகை விறகின் வெள்ளி அடுப்பு (சீவக. 131). மெத் தெனவே அடுப்பில் நின்று இழிச்சீரே (கலிங். 552). முறித்தவை அடுப்பின் மாட்டி (பெரியபு. 4, 20). புதிய அடுப்பு அழகாக உள்ளது (செய்தி.வ.). 2. செங்கல்சூளை போன்றவற்றில் விறகிட்டு எரிக்கு மிடம். (நாட். வ.) 3.அடுப்பனல். அடுப்பு எரி கிறதா பார் (முன்.). 4. (அடுப்புவடிவுடைய) பரணி விண்மீன். காடு கிழவோன் பூதம் அடுப்பு பரணிப் பெயர் (பிங். 240). தாழி அடுப் பொடு தராசு கங்குல் பரணியின் பெயரபூதம் தாமே (சூடா. உள். நூல்வர. 2),

...

...

அடுப்பு பெ. மனைவி. அவனுக்கு அடுப்புத்தொடுப்பு இல்லையா? (பே.வ.).

அடுப்பு' பெ. அடுத்திடல். (அக.நி. 141)

அடுப்பு பெ. அச்சம். அச்சப்பெயரும் அடுப்பு என லாகும் (பிங்.3047).

அடுப்புக்கரி பெ. அடுப்பில் எரிந்த கரி, மரக்கரி, (செ.

ப. அக.)

அடுப்புக்கும்பி பெ. அடுப்புச் சாம்பல். (LLAGOT.)

அடுப்புக்கொட்டம் பெ. சமையற் கொட்டகை. (முன்.)

அடுப்புக்கொண்டை பெ. பாத்திரத்துக்கு நெருப்புக் கொழுந்துகள் வர இடம் விட்டு அடுப்பின்மேல் அமைக்கும் குமிழ்கள். (நாட்.வ.)

அடுப்புச்சாம்பல் பெ. அடுப்பு அணைந்த பின் அதனுள் ளிருந்து அகற்றும் சாம்பல். (முன்.)

அடுப்புநாச்சி பெ. அடுப்புக்குரிய தெய்வம். (இலங். வ.)

அடுப்பூதி பெ.

2.மூடன்.

1.சமையற்காரன். (மதிமோச. 2, 5)

மூடன். (முன்.)