உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை1

...

அம்மை! பெ. 1. தாய். அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் (தேவா.6,53,9). நின் அம்மைதன் அம்மணிமேல் கொட்டாய் சப்பாணி (பெரியாழ். தி.1,7,3). அம்மையே அப்பா ஒப்பிலாமணியே (திருவாச. 37,3). அண்ணல் செய்கையும் அம்மை தீமையும் (கம்பரா. 2, 9, 119). அம்மை திருமுலைப் பாலிற் குழைத்த ஆர் அமுது உண்டார்க்கு (பெரியபு. 28, 1167). 2. (தாய் என்னும் பாவனையில்) பார் வதி. அம்மையோ டத்தனும் யானும் உடனிருந்து (திருமந். 1254). அம்மையப்பரே உலகுக்கு அம்மை யப்பர் (களிற்று. 1). அம்மை அவன் திரு வடிமலர்மிசை தாழ்ந்து (கந்தபு.6,18,14). அரனோடு அம்மை தோன்றி (திருமலைமுரு. பிள். 42). 3. தரும தேவதை. இயக்கி பகவதி அம்மை தரும தேவதை (சூடா.நி.1,31). 4. சைன மதத் தவப்பெண். கந்தியே ஔவை அம்மை கன் னியே கௌந்தியென்ப (சூடா. நி. 2, 62). 5. (திரு விளையாடற் புராணத்தில் கூறப்படும்) மதுரைப் பிட்டு வாணிச்சி, வந்தி. வையை மேன்மை நதி உடைப்பு அடைப்பானடை அந்தம்மை (கடம்ப. பு. 505). பாலகனிறைச்சி அம்மை நல்லபிட்டு அயிலக் கண்டே (திருவாலபு.30,52). 6 காரைக்காலம்மை யார். அப்பரிசு அருளப்பெற்ற அம்மையும் (பெரியபு.

24, 62).

...

600

...

அம்மை' பெ. உடலில் கொப்புளங்களோடு வரும் தொற்று நோய். எல்லோரும் சுரத்தினாலும் அம்மை யினாலும் உபாதைப்பட்டார்கள் (பிரதாப. ப. 10).

அம்மை' பெ. கடுக்காய். (பச்சிலை. அக.)

அம்மை பெ. 1. அழகு. அழகும் வருபிறப்பும் தாயும் அம்மை (பிங். 3072). 2. 2. அமைதி. அம்மையும் அழகும் கொம்மையொடு கழுமி (பெருங். 1,40, 210). அம்மை அஞ்சொலார் ஆர உண்டு (சீவக. 3131). 3. நூலுக்குரிய எண்வகை வனப்புக்களுள் ஒன்று. சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொகுக்கப்பட்ட அடிநிமிர் வில்லாத செய்யுள் அம்மையாம் என்றவாறு (தொல். பொ. 536.இளம்.).

அம்மை' பெ. 1. பின்னர் வரும் பிறப்பு. அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு (தேவா. 7,34, 1). அம் மைக்கு அருமாநரகம்தருமால் (கம்பரா. 3, 10, 13). இம்மையும் பயவாது அம்மையும் உதவாது (ஞானா. 5,11). அம்மை முத்தி அடைவதற்காக... (பட்டினத் துப். திருவிடை. மும். 19. 27). அம்மையில் வாழ்விடை