185
சாந்தியின் சிகரம்
வில்லை டாக்டர். ஸ்ரீகிருஷ்ணனின் ஜன்ம பூமியில், தவம் கிடக்கும் மகானுபாவரை தரிசிக்கும்படிக்குச் செய்யும் உங்களை நான் எப்படித்தான் போற்றி வணங்குவேன் என்றே தெரியவில்லை. தாயே! என்னை மறக்க வேண்டாம். என் மனத்துடிப்பின் வேகம், அந்த த்யாக பிம்பத்தை தரிசித்த பிறகே, சாந்தியை அடையும்…” என்று அவள் உள்ளத்தை அப்படியே திறந்து காட்டுவது போல், பேசினாள்.
துளஸிபாயிக்கு இந்த ஆழமான அன்பின் ஜ்வாலையின் வேகம், நன்றாக மனத்தில் பட்டது… “ராதா! நீ கவலைப்படாதே. நீ சொல்லியா, நான் உன்னை அழைத்துப் போக ஏற்பாடு செய்தேன். எப்போது புறப்பட வேணுமோ, அதை நான் பிறகு தெரிவிக்கிறேன். இதை வெளியே சொல்லாதே…” என்று எச்சரித்து விட்டுச் சென்றாள்.
அதி மனோகரமான காலை நேரம். எங்கு பார்த்தாலும் சிலுசிலுப்பான காற்று ஜம்மென்று வீசுகிறது. பக்ஷி இனங்கள் தனிக்காட்டு அரசு புரிவது போல், இங்குமங்கும் சுதந்திரச் சிறகடித்துப் பாடிய வண்ணம் பறக்கின்றன. தொழிலாளர்கள், கலப்பையும் கையுமாக சிலர், மாடுகளை ஓட்டிச் சிலர், தயிர் பால்… காய்கறிகள் முதலிய பண்டங்கள் சகிதம் சிலர், இப்படியாக சாரி,சாரியாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த அழகை அள்ளிப் பருகியவாறு, நாலைந்து கார்களில், தாமோதரன், உஷா, துளஸி, ராதா, கமலவேணி முதலிய பலர் செல்கிறார்கள். ஒவ்வொருவருடைய உள்ளம், ஒவ்வொரு விதமான பூரிப்பை அடைந்து, கும்மாளமிடுகின்றது. எனினும் தன்னருமைக்
சா-17