உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:துளுநாட்டு வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

துளு நாட்டு வரலாறு

10 துளு நாட்டு வரலாறு செய்து கொண்டே நாடு பிடித்த காலத்தில், துளு நாடாகிய கொங்கண நாடு கி.பி. 1799ஆம் ஆண் டில் அவர்கள் ஆட்சிக்கு வந்தது. பிறகு அவர்கள் இந்த நாட்டுக்குத் தென்கன்னட மாவட்டம் என்று தவறான பெயர் கொடுத்துச் சென்னை மாகாணத் தின் ஒரு பிரிவாக இணைத்துவிட்டனர். எனவே, இதற்குத் தென் கன்னடம் என்னும் பெயர் மிகச் சமீப காலத்தில் தவறாக ஏற்பட்டதாகும். ஆனால் அதன் பழைய பெயர் துளுநாடு அல்லது கொங் கணநாடு என்பது. ன கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் பாரதநாட்டை யரசாண்ட அசோக சக்கரவர்த்தி தம்முடைய சாச த்தில் கூறுகிற 'சத்திய புத்திரநாடு' என்பது துளுநாடே. இது பற்றி வேறு கருத்துகளும் உண்டு. (இணைப்பு 1 காண்க) கடைச்சங்க காலத் தின் இறுதியில் (கி. பி. 2ஆம் நூற்றாண்டு) இருந்த தாலமி (Ptolemy) என்னும் யவனர், துளுநாட்டில் டமிரிகே (Damirike) தொடங்கியது என்று கூறு கிறார். டமிரிகெ என்பது திராவிடகம் என்னும் தமிழகம் ஆகும். எனவே துளுநாடு அக்காலத்தில் தமிழ் நாடாக இருந்தது என்பது தெரிகிறது. சங் கச் செய்யுள்களும் துளுநாட்டுக்கு அப்பால் மொழி பெயர் தேயம் (வேறு பாஷை பேசப்பட்ட தேசம்) இருந்ததாகக் கூறுகின்றன. துளு என்றால் போரிடுதல், எதிர்த்தல் என்பது பொருள். பழங்கன்னட மொழியில் துளு என்னுஞ் சொல்லுக்கு இந்தப் பொருள் உண்டு. எனவே துளுநாடு என்றால் வீரர்கள் உள்ள நாடு என்று பொருள் கொள்ளலாம். துளுநாட்டு வீரர்களைப் பற்றிச் சங்க நூல்கள் கூறுகின்றன.